News August 10, 2024
தலைவலியில் இருந்து விடுபட!

எறும்பு போல சுறுசுறுப்பாக ஓடும் மனிதர்களை கூட எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு ஓரமாக உட்கார வைத்துவிடும் தலைவலி. என்ன செய்தாலும் மீண்டும் வந்து தொல்லை தரும் தலைவலியை நொடி பொழுதில் விரட்டி அடிக்கும் வீரியம் கொண்டது இஞ்சி என்கிறார்கள் மருத்துவர்கள். இஞ்சியை தோல் சீவி, சிறு துண்டுகளாக அறுத்து மென்று சாப்பிட்டால் தலைவலி குறையும். அடுத்தமுறை உங்களுக்கு வலி ஏற்பட்டால், இதை செய்து பாருங்கள்.
Similar News
News December 26, 2025
யூடியூபர்ஸ் இருக்காங்களே.. சண்முக பாண்டியன்

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேஸிங்கில் பிஸியாக உள்ளார், இதனால் தமிழ் சினிமா சற்று நெருடலை சந்திக்கும் என பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சண்முக பாண்டியன், தற்போது யூடியூபர்ஸ், இன்ஸ்டா, டிக்டாக் பிரபலங்கள் நடிக்க வந்துவிட்டனர் என தெரிவித்தார். MGR தொடங்கி விஜய் வரை ஒவ்வொரு முறையும் தமிழ் சினிமா வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
News December 26, 2025
அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாக்கிறது: PM மோடி

சுதந்திரத்திற்கு பின் அனைத்து நற்பெயர்களும் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சுற்றியே இருந்ததாக, காங்.,ஐ PM மோடி மறைமுகமாக சாடியுள்ளார். லக்னோவில் பேசிய அவர், ஒரு குடும்பத்திற்கு மட்டுமே கட்டுப்பட்ட பழைய அமைப்பிலிருந்து இந்தியாவை பாஜக மீட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அம்பேத்கரின் மரபை அழிப்பதில் காங்., சமாஜ்வாதி கட்சிகள் பாவம் செய்ததாக கூறிய மோடி, அம்பேத்கரின் மரபை பாஜக பாதுகாத்து வருகிறது என்றார்.
News December 26, 2025
நெப்போலியன் பொன்மொழிகள்

*முடியாது என்ற வார்த்தை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணக்கூடிய ஒன்று.
*உங்கள் எதிரி தவறு செய்யும் போது, ஒருபோதும் அதில் குறுக்கீடு செய்யாதீர்கள்.
*சிந்திப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் செயலுக்கான நேரம் வரும்போது சிந்தனையை நிறுத்திவிடுங்கள்.
*இரவில் உங்கள் உடைகளை தூக்கி எறியும்போது, உங்கள் கவலைகளையும் தூக்கி எறிந்துவிடுங்கள்.


