News May 16, 2024
கோடை மழையால் ஏற்படும் சளி தொல்லை நீங்க…

கோடைக்காலத்தில் பொழியும் மழையால் ஏற்படுகிற நோய்களில் சளி, இருமல், மூக்கடைப்புக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இதில் இருந்து தப்பிக்க வேப்பிலை, சீரகம், மிளகு, கற்பூரவள்ளி ஆகியவற்றை இடித்து, நீரில் போட்டு கொதிக்க வைத்து, கஷாயமாக தயார் செய்யவும். இதனை காலை – மாலை இருவேளை 3 நாள்கள் குடித்தால் மிகச்சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News November 10, 2025
‘அம்மா SORRY.. என் சாவுக்கு இவர்கள்தான் காரணம்’

‘அம்மா என்னை மன்னித்துவிடு. என் கணவன் விரும்புவது என் உடலை மட்டுமே, மனதை அல்ல. என் சாவிற்கு மாமனார், மாமியார் உள்ளிட்டோர்தான் காரணம்’. கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரேஷ்மாவின் கடைசி வரிகள் இவை. திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை தனது பெற்றோரிடம் திரும்பிக் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News November 10, 2025
தேர்தலில் EPS-க்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: RS பாரதி

பாஜகவுக்காக EPS நடத்திய அடிமை ஆட்சியால், நீட் முதல் மின்சாரம் வரை தமிழகத்தின் உரிமைகளை இழந்துள்ளதாக RS பாரதி விமர்சித்துள்ளார். மாநில மக்களின் வாக்குரிமைக்கு அச்சுறுத்தல் தரும் SIR-யை கண்டிக்க திராணியில்லாமல் EPS வக்காலத்து வாங்கி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு துணை போகும் EPS-க்கு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 10, 2025
யூடியூபரை மன்னிக்க முடியாது: கவுரி கிஷன்

நடிகை கவுரி கிஷனிடம் எடையை கேட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட யூடியூபர் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால், பொறுப்புணர்வு இல்லாமல் மன்னிப்பு கேட்பது, மன்னிப்பே இல்லை என கவுரி பதிவிட்டுள்ளார். மேலும், அது ஒரு வேடிக்கையான கேள்வி என்று யூடியூபர் சொன்னதை சுட்டிக்காட்டிய அவர், பெயரளவுக்கான வருத்தத்தை தான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.


