News September 4, 2025
ரத்த நிலவை காண ரெடியாகுங்க!

வரும் 7-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே பூமி பயணிப்பதால், செந்நிற ஒளியில் நிலவு பிரகாசிக்கும். இதனால், இதை ‘ரத்த நிலவு’ என வானியலாளர்கள் வர்ணிக்கின்றனர். இரவு 8:58-க்கு தொடங்கும் இந்த கிரகணம், நள்ளிரவு 2:25 வரை நிகழ்ந்தாலும், இரவு 11 முதல் 12:22 மணி வரை ரத்த நிலவு முழுமையாக பிரகாசிக்கும். மொட்டை மாடியில் நின்றும் வெறும் கண்களால் இந்த அரிய நிகழ்வை காணலாம்.
Similar News
News September 4, 2025
ஆச்சரியம் ஆனால் உண்மை..!

சில விஷயங்களை பார்க்கும் போதோ, கேட்கும் போதோ நமக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால், அது அறிவியல் பூர்வமான உண்மை என தெரிந்ததும், நமக்கு அதிர்ச்சியே ஏற்படும். அந்தவகையில், சில Interesting Facts-களை இங்கு தொகுத்துள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்திய, அதிர்ச்சியாக்கிய உண்மைகளை கமெண்ட் செய்யவும்.
News September 4, 2025
BREAKING: தீபாவளி பரிசு அறிவித்த பிரதமர் மோடி

தீபாவளி, சாத் பண்டிகைக்கு இரட்டை பரிசை மத்திய அரசு அறிவித்துள்ளதாக PM மோடி கூறியுள்ளார். டெல்லியில், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் பேசிய அவர், 21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு <<17608536>>GST சீர்திருத்தம்<<>> உதவிகரமாக இருக்கும் என்றார். மேலும், GST-க்கு முன்பு காங்., ஆட்சியில் மருந்துகள், காப்பீடு, சமையல் பொருள்களுக்கு ஏராளமான வரி விதிக்கப்பட்டதாக கடுமையாக சாடியுள்ளார். உங்கள் கருத்து?
News September 4, 2025
20-வது இடத்தில் அண்ணா பல்கலை.,

நாட்டின் சிறந்த பொறியியல் பல்கலை.,யான அண்ணா பல்கலை.,க்கு இது இறங்குமுகம். ஆம், தரவரிசையில் 2023-ல் 13-வது இடத்தில் இருந்த இது, 2025-ல் 20-வது இடத்துக்கும், Overall பிரிவில் 29-வது இடத்துக்கும் சரிந்துள்ளது. இந்த பல்கலை., வளாகத்தில் நடந்த ஒரு பாலியல் குற்றத்தால், பெயர் கெட்டுவிடக் கூடாது என மின்னல் வேக நடவடிக்கை எடுத்த அரசு, இதையும் அதே வேகத்தில் சரிசெய்யுமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.