News September 9, 2025

தனுஷின் பேச்சை கேட்க ரெடியாகுங்க..!

image

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் ஆடியோ லாஞ்ச் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்.14-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. அக்.1-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில், அருண் விஜய், ராஜ்கிரண், சத்யராஜ், நித்யா மேனன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். தனுஷின் ஆடியோ லாஞ்ச் பேச்சுக்கு யாரெல்லாம் வெயிட்டிங்?

Similar News

News September 9, 2025

11 மாவட்டங்களில் கனமழை அலர்ட்

image

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் வெளியே செல்லும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

News September 9, 2025

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் PM மோடி

image

பெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களை PM மோடி இன்று பார்வையிட உள்ளார். பிற்பகல் 1.30 மணியளவில் ஹிமாச்சல் செல்லும் அவர், உயரதிகாரிகளை சந்தித்து சூழ்நிலை குறித்து ஆய்வு செய்யவுள்ளார். தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு 3 மணிக்கு மேல் பஞ்சாப் செல்ல திட்டமிட்டுள்ளார்.

News September 9, 2025

புரதச்சத்து நிறைந்த டாப் 5 உணவுகள்

image

உடலில் புது செல்கள் உருவாவதற்கும், சேதமடைந்த செல்களை சரிசெய்வதற்கும் புரதச்சத்து மிக அவசியமானது. குறிப்பாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்தை போதுமான அளவு கொடுக்க வேண்டும். நாம் நமது உடல் எடைக்கு ஏற்ப அன்றாடம் புரதச்சத்துமிக்க உணவுகளை உட்கொள்ள வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். உதாரணமாக 70 கிலோ எடையுள்ள நபர் 55 முதல் 70 கிராம் புரதம் சாப்பிடுவது நல்லது.

error: Content is protected !!