News September 21, 2025
வீட்டிலேயே பொலிவு பெற

வீட்டிலேயே பழங்களை வைத்து எளிதாக அழகை பராமரிக்கலாம். என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த டிப்ஸை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குறைந்தது 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். பின்னர், உங்கள் முகம் பளபளக்கும். இதில் நீங்க எதை ட்ரை செய்திருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News September 21, 2025
வெங்காயத்தால் கண்ணீர் வருவது ஏன் தெரியுமா?

வெங்காயம் வெட்டும்போது, அதில் உள்ள Propanethial S-oxide என்ற ரசாயனம் வெளியாகி, காற்றில் கலக்கிறது. இது கண்களில் உள்ள ஈரப்பதத்தை வந்து சேரும்போது சல்பூரிக் அமிலமாக மாறுகிறது. இதனால் எரிச்சல் ஏற்பட்டு கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. எனவே, வெங்காயத்தை வெட்டும்போது கண்களில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க அதை தண்ணீரில் நனைத்து பயன்படுத்தலாம். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.
News September 21, 2025
நாடு முழுவதும் விலையை குறைத்தது அமுல்..!

பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 0%, 5% ஆக மாற்றப்பட்டுள்ளதால், அவற்றின் விலையை அமுல் நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, ₹83-க்கு விற்கப்பட்டு வந்த அமுல் கோல்டு பால் இனி ₹80-க்கு கிடைக்கும். அரை கிலோ வெண்ணெய் விலை ₹20 குறைந்து ₹285-க்கு விற்கப்படவுள்ளது. மேலும் முறையே 200 கிராம் பிரெஞ்ச் ஃபிரைஸ் பாக்கெட் விலை ₹3, 150 கிராம் டார்க் சாக்லேட் விலை ₹20, அமுல் நெய் டின் ஒரு லிட்டர் ₹40 குறைந்துள்ளது.
News September 21, 2025
விஜய்க்கு அட்வைஸ் செய்த கமல்ஹாசன்

கூடும் கூட்டம் வாக்காக மாறாது என விஜய் மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் விமர்சனத்தையே கமல்ஹாசனும் பிரதிபலித்துள்ளார். விஜய் நல்ல பாதையில் செல்ல வேண்டும் என்றும், தைரியமாக முன்னேறிச் சென்று மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். கூடும் கூட்டம் கண்டிப்பாக வாக்காக மாறாது எனக் குறிப்பிட்ட அவர், அது விஜய்க்கு மட்டுமல்ல தனக்கும், எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும் என்றார்.