News February 28, 2025
முந்துங்கள்.. ₹20 லட்சம் சன்மானம்…

கோலிவுட்டின் தலைநகரமாக சென்னை சாலிகிராமம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அங்கு ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுபவமிக்க இயக்குநரின் தரமான படைப்பு ஒன்று தயாராக இருப்பதாகவும், அதற்கு ₹2 கோடி முதலீடு பெற்றுத் தருவோருக்கு ₹20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் போஸ்டர் கூறுகிறது. ஆனால், இதனை யார் ஒட்டியது என்ற தகவல் இல்லை.
Similar News
News March 13, 2026
பாகிஸ்தான் வீரரால் SRH அணிக்கு குவியும் எதிர்ப்பு!

தி ஹண்ட்ரட் தொடருக்கான ஏலத்தில் <<19367924>>பாக்., வீரர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது<<>> அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. SRL அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு சொந்தமானது. அப்ராரின் ஏலத்தை ஒருபக்கம் சிலர் பாராட்டினாலும், தேசிய உணர்வை அவமதித்ததாக கூறி #ShameOnSRH, #BoycottSunrisers போன்ற ஹேஷ்டேக்குகள் SRH-க்கு எதிராக SM-ல் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
News March 13, 2026
இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி!

ஹார்முஸ் நீரிணையில் நிலவும் ஈரானின் தாக்குதலால், பல எண்ணெய் கப்பல்கள் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எடுத்துக்கூறி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் <<19367934>>PM மோடி ஈரான் அரசுடன் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை<<>> நடத்தினர். அதன் பலனாக இந்திய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்ல ஈரான் அரசு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
News March 13, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அமைச்சியல் ▶அதிகாரம்: அமைச்சு ▶குறள் எண்: 631 ▶குறள்: கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. ▶பொருள்: உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.


