News March 16, 2024
நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா பெறலாம்!

சேலம் மாநகராட்சியில் நகர நிலவரித் திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் வட்டம், சேலம் மேற்கு மற்றும் தெற்கு ஆகிய வட்டங்களை சார்ந்த நில உரிமையாளர்கள் இணையதளம் வழியாக பட்டாவிற்கு விண்ணபிக்கலாம் என ஆட்சியர் பிருந்தாதேவி இன்று தெரிவித்துள்ளார். மக்கள் பத்திர பதிவு ஆவணங்களை கொண்டு நகர நிலவரித்திட்ட அலகு 1,2,3 மற்றும் 4ல் தனி வட்டாட்சியர் வழியாக பட்டா பெறலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News February 2, 2026
சேலம் அருகே பயங்கர விபத்து: ஒருவர் பலி

நாமக்கல்லைச் சேர்ந்த தனசேகர் என்பவர், தனது மனைவி மற்றும் மகனுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர்கள் மீது மோதியது. இவ்விபத்தில் தனசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி மற்றும் மகன் இருவரும் மீட்கப்பட்டு, GH-ல் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News February 2, 2026
சேலம்: தாயின் கண் முன்னே நேர்ந்த சோகம்

தட்டான்காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவர், தனது தோழியுடன் ஒரு பைக்கிலும், அவரது இரு மகன்கள் மற்றொரு பைக்கிலும் காளிப்பட்டி கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது காளிப்பட்டி அருகே சென்றபோது, மகன்கள் வந்த பைக் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஜோதியின் இரண்டு மகன்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
News February 1, 2026
சேலம் இரவு ரோந்து போலீசார் விவரம்

சேலம் மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கும், குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்வதற்கும் காவல்துறையினர் தினசரி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, பிப்ரவரி 01 அன்று இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் விபரங்கள் மற்றும் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் சம்பந்தப்பட்ட காவலர்களை தொடர்புகொள்ளலாம் அல்லது 100 அழைக்கவும்


