News September 13, 2025
ஒவ்வொரு மாதமும் ₹9,250 கிடைக்கும்; அடடே திட்டம்!

ஒருமுறை முதலீடு செய்தால் மாதம் ₹9,250 வட்டியாக கொடுக்கிறது போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமான திட்டம். இத்திட்டத்தில், ₹1 லட்சம் – ₹15 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, ₹15 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹9,250 வருமானமாக கிடைக்கும். 5 ஆண்டுகள் கழித்து திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் நீங்கள் செலுத்திய ₹15 லட்சம் உங்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படும். SHARE.
Similar News
News September 13, 2025
CPI மாநிலச் செயலாளராக வீரபாண்டியன் தேர்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முத்தரசனின் பதவி காலம் நிறைவடைந்ததால், புதிய மாநிலச் செயலாளரை தேர்வு செய்வதற்கான மாநிலக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், மாநில துணைச் செயலாளராக இருந்த மு.வீரபாண்டியனை, மாநிலச் செயலாளராக நியமித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளாக முத்தரசன் இப்பதவியை வகித்தது குறிப்பிடத்தக்கது.
News September 13, 2025
இனி ஷாம்பு முதல் ஹார்லிக்ஸ் வரை விலை குறைகிறது!

ஜிஎஸ்டி வரம்பு மாற்றத்தை அடுத்து ஹிந்துஸ்தான் யுனிலிவர் தனது பொருள்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. அதன்படி, ஹார்லிக்ஸ், ப்ரூ காப்பித்தூள், டவ் ஷாம்பு, கிசான் ஜாம், லக்ஸ் சோப், லைஃப் பாய் சோப் உள்ளிட்டவற்றின் விலை செப்.22-ம் தேதி முதல் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருள்களின் மாற்றியமைக்கப்பட்ட விலையை மேலே உள்ள போட்டோஸை ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News September 13, 2025
திமுகவை சீண்டிய விஜய்

விஜய் தனது முதல் பரப்புரையை, திமுக எதிர்ப்புடனேயே தொடங்கியுள்ளார். 2021-ல் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். பழைய ஓய்வூதிய திட்டம் என்னாச்சு? மாதந்திர மின்கட்டண கணக்கீடு என்னாச்சு? மாணவர்களின் கல்விக் கடன் ரத்து என்னாச்சு? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய விஜய், நாம் கேட்டுக்கொண்டே இருந்தாலும் அவர்களிடம் பதில் இல்லை என சாடியுள்ளார்.