News March 15, 2025
நத்தம் புளி, நல்லூர் வரகுக்கு புவிசார் குறியீடு

நத்தம் புளி, நல்லூர் வரகு, ஆயக்குடி கொய்யா, வேதாரண்யம் முல்லை, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுவரை 35 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 15, 2025
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம்

தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் 4 ஆண்டுகளில் 10,187 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2025–26ல் மேலும் 2,338 ஊராட்சிகளில் விரிவுபடுத்தப்படும் என்றும், இதன் மூலம் 9.36 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 15, 2025
குடும்பத்துடன் Chill செய்யும் ரோகித் சா்மா

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிலாக்ஸ் செய்ய குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். குடும்பத்துடன் கடலின் அழகை ரசித்த அவர், அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடருக்காக மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ரோகித் சர்மா அடுத்த வாரம் பயிற்சியை தொடங்குவார் என கூறப்படுகிறது.
News March 15, 2025
பிரபல நடிகர் மறைந்தார்… திரையுலகம் அஞ்சலி

பிரபல பாலிவுட் மூத்த நடிகரும், தயாரிப்பாளருமான தேவ் முகர்ஜி (83), உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் திரண்டு வந்து நேற்று அவருக்கு அஞ்சலி செலுத்தியபின், அவரது இறுதிச்சடங்கு நடந்தது. அப்போது நடிகர் ரன்பீர் கபூர் அவரது உடலை சுமந்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முகர்ஜியின் மகனும் இயக்குநருமான அயன், ரன்பீரின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.