News April 1, 2025

மேலும் 2 தமிழக பொருட்களுக்கு புவிசார் குறியீடு

image

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரம் கிடைத்துள்ளது. புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் (அ) நகரம் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அடையாளம் ஆகும். தேசிய அளவில் 62 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தமிழ்நாடு முதலிடத்திலும் கர்நாடகா, உத்தரப்பிரதேசம் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

Similar News

News August 14, 2025

ரஜினி மீதான வியப்பு குறையவே இல்லை: ஷங்கர்

image

ரஜினி திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் ஷங்கர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 50 வருடங்களாக ரஜினி மீதான வியப்பு ஒரு நொடியும் குறையாமல் தொடர்வதாகவும், எந்த மனிதரின் நேர்மறை சிந்தனையும் 50 அடி தூரத்தில் பரவும், ஆனால் ரஜினியின் நேர்மறை சிந்தனை உலகையே சூழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘அரங்கம் அதிரட்டும்’ என ‘கூலி’ படத்தையும் வாழ்த்தியுள்ளார்.

News August 14, 2025

தொப்பை குறைய உதவும் பாலாசனம்!

image

✦முதுகு, கழுத்து, வயிற்றுப்பகுதி வலுவடைந்து, தொப்பை குறையும்.
✦2 கால்களையும் மடக்கி, கால் பெருவிரல்கள் இரண்டும் ஒன்றின் மீது ஒன்று இணையும் படி அமருங்கள்
➥மூச்சை உள்ளிழுத்து, இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்குங்கள். மூச்சை வெளியே விட்டுக் கொண்டே, நெற்றி தரையில் படும் படி குனியுங்கள்.
➥15- 20 விநாடிகள் இந்த நிலையில் இருந்து விட்டு, மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.

News August 14, 2025

நான் உறங்க போவதில்லை: CM ஸ்டாலின்

image

திமுக மீண்டும் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டதால், தானும் உறங்கப் போவதில்லை, உங்களையும் உறங்கவிட போவதில்லை என ஸ்டாலின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார். திமுகவின் நலத்திட்டங்கள் மூலம் மக்​கள் மத்​தி​யில் செல்​வாக்கு அதிகரித்துள்ளதாகவும், வரும் நாள்​களில் திமுக அரசு மேற்​கொள்​ளும் நடவடிக்​கைகளால், தமிழகத்​தின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடு​களுக்கு இணை​யாக உயரும் என்றும் கூறினார்.

error: Content is protected !!