News August 31, 2025
பொது அறிவு விநாடி வினா கேள்விகள்

1. மொழி அடிப்படையில் உருவான முதல் மாநிலம் எது?
2. KFC என்பதன் விரிவாக்கம் என்ன?
3. மனித இதயம் எத்தனை அறைகளைக் கொண்டுள்ளது?
4. இந்தியாவில் தேசிய திரைப்பட விருதுகள் எந்த அமைப்பால் வழங்கப்படுகின்றன?
5. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் யார்?
கேள்விகளுக்கு சரியான பதிலை கமெண்ட் பண்ணுங்க. பதில்கள் மதியம் 2 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.
Similar News
News September 1, 2025
ஆண்களை விட மகளிருக்கு அதிக பரிசு: ஐசிசி

கிரிக்கெட்டில் பரிசுப் பணம் தொடங்கி அங்கீகாரம் வரை பாலின பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை சரிசெய்யும் முயற்சியாக, மகளிர் உலகக் கோப்பை பரிசுத் தொகையை ஐசிசி பல மடங்கு உயர்த்தியுள்ளது. சாம்பியனுக்கு ₹39 கோடி, 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹20 கோடியும், ஒட்டுமொத்த பரிசுத் தொகை ₹122 கோடியும் வழங்கப்படும். இத்தொகை 2023 ஆண்கள் WC-க்கு வழங்கப்பட்ட தொகையை ( ₹83 கோடி) விட அதிகமாகும்.
News September 1, 2025
BREAKING: தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல்.. அரசு எச்சரிக்கை

காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில், வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் இருப்பவர்கள் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் அலட்சியப்படுத்தாமல் ஹாஸ்பிடலுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.
News September 1, 2025
சுங்கக்கட்டண உயர்வு : மத்திய அரசுக்கு TTV கோரிக்கை

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். தனது X தள பதிவில் அவர் இந்த சுங்கக் கட்டண உயர்வு ஏழை, எளிய மக்கள் மீதான பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதோடு தமிழகத்தில் காலாவதியான நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுங்கச்சாவடிகளை மூடவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.