News September 26, 2024
பொது அறிவு வினா – விடை

1) உலகில் உள்ள பறவைகளில் மிகச்சிறியது எது? 2) URL என்பதன் விரிவாக்கம் என்ன? 3) மணிலா பயிர் என அழைக்கப்படும் பயிர் எது? 4)தலையில் இதயம் கொண்ட உயிரினம் எது? 5) பாரம்பரிய மரபியல் பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மரபணு எது? 6) நவீன கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்? 7) இந்தோனேசியாவின் முதல் ஜனாதிபதி யார்? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான விடையை 2 மணிக்கு பாருங்க.
Similar News
News August 24, 2025
குரூப்-2 தேர்வுக்கு கட்டணமில்லா இலவச வகுப்பு

செப்.,28ம் தேதி நடக்கவிருக்கும் குரூப் 2 போட்டித் தேர்வை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கட்டணமில்லா இலவச வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வாரம், திங்கள்–பொருளியல், செவ்வாய்–கணக்கு, புதன்–விடுமுறை, வியாழன்–unit 6, வெள்ளி–வரலாறு ஆகிய வகுப்புகள் நடைபெறவுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வகுப்புகளை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News August 24, 2025
‘அம்மா நான் சாகப்போறேன்.. என் சாவுக்கு 3 பேர் காரணம்’

தெலங்கானாவில் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இளைஞர் கொடிரெக்கலா சுதீர்(24) தனது கடிதத்தில், ‘நான் சாகப்போகிறேன். எனது சாவுக்கு 3 பேர் காரணம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் சுதீர் தவறான உறவில் இருந்ததாக அவரது கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் வதந்தி பரப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. சோகம்
News August 24, 2025
‘எஞ்சாமி தந்தானே’… ‘இட்லி கடை’ 2-வது பாடல்

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தின் 2-வது பாடல் ‘எஞ்சாமி தந்தானே’ விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகிறது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கிராமிய குத்து பாடலாக எஞ்சாமி தந்தானேவை உருவாக்கியுள்ளார். சிறுவர்களுடன் தனுஷ் குத்தாட்டம் போடும் போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது. அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸிற்கு ‘இட்லி கடை’ திட்டமிடப்பட்டுள்ளது.