News October 25, 2024
பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

இன்று 10 மணிக்கு <<14447837>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) 12,500 2) ஐசக் மெரிட் சிங்கர் 3) கவிராஜமார்க்கம் 4) R.K.பச்சோரி கமிட்டி 5) ஐரோப்பா 6) செங்காந்தள் 7) Earnings Per Share. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News November 1, 2025
அக்டோபர் GST வசூல் ₹1.95 லட்சம் கோடி

அக்டோபர் மாத GST வசூல் ₹1.95 லட்சம் கோடியாக உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாத வசூலான ₹1.89 லட்சத்தை விட 4.6% அதிகமாகும். அதேபோல், 2024 அக்டோபர் வசூலை விட 9% அதிகமாகும். தொடர்ச்சியாக கடந்த 10 மாதங்களாக GST வசூல் ₹1.8 லட்சம் கோடியை தாண்டி வருவதாகவும் நிதியமைச்சகம் கூறியுள்ளது. GST 2.0 காரணமாக எலெக்ட்ரிக் சாதனங்கள் விற்பனை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 1, 2025
சித்தராமையாவை ஏன் காங்கிரஸ் மாற்றாது? (1/2)

கர்நாடகாவில் இந்த முறையும் CM பதவியில் அமர DK சிவகுமாருக்கு வாய்ப்பில்லை. காங்., தலைமையே விரும்பினாலும் அது நடக்காது என்கின்றனர். சித்தராமையாவின் AHINDA(சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்) ஃபார்முலாவே இதற்கு காரணம். ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த DKS–ஐ CM ஆக்கினால், AHINDA வாக்குவங்கி கைவிட்டு போய்விடுமென காங்., அஞ்சுகிறது. <<18168420>>அடுத்த செய்தியில் விவரம் அறிக.<<>>
News November 1, 2025
சித்தராமையாவை ஏன் காங்கிரஸ் மாற்றாது? (2/2)

பிராமணர், ஒக்கலிகர், லிங்காயத் ஆதிக்கம் செலுத்திய கர்நாடகாவில், இதர OBC, Minority, Dalit நலனுக்காக அம்மாநில முதல் ஓபிசி CM தேவராஜ் அர்ஸ் உருவாக்கிய மாடலே AHINDA. தேவகவுடாவின் JD(S), ஒக்கலிகர் கட்சியாக மாறிப்போனதால் சித்தராமையாவுடன் AHINDA சமூகத்தினரும், காங்., நோக்கி நகர்ந்தனர். ஒக்கலிகர் வாக்குகளை JD(S), BJP பங்குபோடுவதால், DKS-ஐ CM ஆக்கினால் லாபத்தைவிட நஷ்டம் அதிகம் என காங்., தயங்குகிறது.


