News October 15, 2024
பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

இன்று 11 மணிக்கு <<14360342>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி 2)நுளம்பு 3) சிவப்பு கங்காரு 4) 5.95 லட்சம் சதுர கிமீ 5) Greenwich Mean Time 6)ஜப்பான் 7)இனிப்புச் சுவை. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். பிறருக்கும் பகிருங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
Similar News
News August 14, 2025
நான் சுயநலமாக சிந்தித்தது கிடையாது: வைகோ

சில நேரங்களில் கூட்டணி தவறுகள் நடந்திருக்கலாம், அது மனித இயல்பு என வைகோ கூறியுள்ளார். திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் பற்றிய பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நான் சுயநலமாக சிந்தித்ததில்லை, மக்களுக்காக குரல் கொடுக்கும் நானே ரியல் பெரியாரிஸ்ட் என பெருமிதம் தெரிவித்தார். தனது தாயார், தம்பி, மகன் என மக்களுக்காக சேவை செய்யும் தனது குடும்பம் தியாக குடும்பம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News August 14, 2025
ஒரே தியேட்டரில் தனுஷ், லதா ரஜினிகாந்த்

‘கூலி’ பட ரிலீஸை ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தனுஷ், சென்னை ரோகிணி தியேட்டரில் படம் பார்க்கச் சென்றுள்ளார். அங்கு தான் லதா ரஜினிகாந்தும் படம் பார்க்க வந்துள்ளார். மனைவியை விட்டு பிரிந்த தனுஷ், தனது தலைவரை தரிசிப்பதை விடமாட்டார் என அவரது ரசிகர்கள் சிலாகிக்கின்றனர். லோகேஷ், அனிருத், ஸ்ருதி ஆகியோர் குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்கின்றனர்.
News August 14, 2025
ஸ்டாலின் தொகுதியில் 9,000 போலி வாக்குகள்: பாஜக

BJP அரசு, ECI உடன் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்., திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்நிலையில், 2021 தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் 19,476 வாக்குகள் சந்தேகத்திற்கு இடமானவை என அனுராக் சிங் தாக்குர் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவற்றில் 9,133 வாக்குகள் போலி வாக்குகள் என்றும், ஒரே முகவரியில் 30 வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.