News August 9, 2025
பொதுக்குழு விவகாரம்.. ராமதாஸ் மேல்முறையீடு

அன்புமணி பொதுக்குழு கூட்டத்திற்கு சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராமதாஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஆக.17-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக ராமதாஸ் அறிவித்து இருந்தார். உடனே, அவருக்கு முன்பே வரும் 9-ம் தேதி பொதுக்குழு கூட்டப்போவதாக அன்புமணி அறிவித்த நிலையில், அதற்கு தடைகேட்டு ராமதாஸ் கோர்ட்டுக்கு சென்றார்.
Similar News
News August 9, 2025
திருப்புமுனையை ஏற்படுத்தும் இன்றைய பாமக பொதுக்குழு

மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு பாமகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ராமதாஸ் – அன்புமணி இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும் இருவரும் சமாதானம் ஆகவில்லை. இதற்கிடையில், தானே பாமக தலைவர் என்று ராமதாஸ் கூறிவரும் நிலையில், இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியே தலைவர் என்று தீர்மானம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
News August 9, 2025
அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்

மூச்சுத்திணறல், இருமலுக்கு பயன்படுத்தும் இப்ராட்ரோபியம் உள்ளிட்டவை அவசரகால மருந்துகளாக உள்ளன. இதன் விலை உச்சவரம்பு 1 ML ₹2.96 ஆக மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. மேலும், BP-க்கு பயன்படுத்தும் சோடியம் நைட்ரோபுரஸைடு 1 ML ₹28.99, நெஞ்சு வலி சிகிச்சைக்கு பயன்படுத்தும் டில்டியாசெம் 1 காப்சூல் ₹26.77-க்கு விற்பனை செய்ய கூறியுள்ளது. இதோடு, 37 மருந்துகளின் விலையை குறைக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
News August 9, 2025
₹10,000 செலுத்தி திருமணத்தில் பங்கேற்கலாம்!

ஃபிரான்ஸ் Startup நிறுவனமான Invitin, ஒரு புதிய ஐடியாவுடன் வந்துள்ளது. அந்நிறுவனம் மூலம் நடைபெறும் திருமணங்களில் ₹10 ஆயிரம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். விருந்து, புதிய உறவுகளை உருவாக்குதல் என அனைத்து வசதிகளையும் பெறலாம். மணமக்களின் திருமண செலவுகளை குறைக்கும் வகையில் இந்த ஸ்டார்ட்அப் செயல்படுகிறது. இந்தியாவிலும் ‘Join My Wedding’ எனும் இந்த நடைமுறை அறிமுகமாகியுள்ளது.