News November 1, 2025
Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம்: கர்னல்

Gen Z தலைமுறையினர் இந்தியாவின் வளம் என்று கர்னல் ஷோஃபியா குரேஷி தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 65%-க்கும் அதிகமானோர் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற அவர், இவர்களில் பெரும்பாலானோர் Gen Z தலைமுறையை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறியுள்ளார். Gen Z தலைமுறை குறித்த கர்னலின் பேச்சு பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News November 1, 2025
கரையான் போல ADMK-வை அரிக்கிறார் EPS: சேகர்பாபு

செங்கோட்டையன் நீக்கம் குறித்து பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, அதி தீவிரமான, அற்புதமான ராஜதந்திர நடவடிக்கைகளால், கரையான் புற்றை அரிப்பது போல, அதிமுகவை EPS அரித்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். EPS பாஜகவை வலுவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், EPS-ன் நடவடிக்கைகளால் திமுகவின் பலம் தான் அதிகமாகிறது என்றும் தெரிவித்தார்.
News November 1, 2025
₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <
News November 1, 2025
தமிழக மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்கணும்: SPK

பிஹார் மக்கள் துன்புறுத்தப்படுவதாக பொய்யான தகவலை பரப்பிய மோடி, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என செல்வப்பெருந்தகை (SPK) வலியுறுத்தியுள்ளார். தேர்தல் லாபத்துக்காக தமிழக மக்களை பழித்துக் கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது; தமிழர்கள் உழைப்பும் அறிவும் இணைந்த மக்களாக உலகம் முழுவதும் மரியாதை பெற்றவர்கள்; அப்படி இருக்கையில் தமிழர்கள் மீதான அவதூறு கருத்தை மோடி திரும்ப பெற வேண்டும் என்றார்.


