News March 15, 2025
GBU அப்டேட் – அடுத்த ‘ஆலுமா டோலுமா’ ரெடி?

அஜித் நடித்த வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா பாடலைக் கேட்டு Vibe செய்யாதவர்களே இருக்க முடியாது. இந்த பாடலை ரோகேஷ் எழுத அனிருத் பாடி இருந்தார். அதேபோல், குட் பேக் அக்லி பட OG SAMBAVAM பாடலையும் ரோகேஷ் எழுதி அனிருத் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 18-ல் வெளியாகும் OG SAMBAVAM பாடலை கொண்டாட அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.
Similar News
News July 5, 2025
தேசிங்கு ராஜா 2 டிரெய்லர்.. செதச்சிட்டீங்க போங்க…

விமல் நடிப்பில் தேசிங்கு ராஜா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் அதனைப் பார்த்த ரசிகர்கள் அப்செட் ஆகி இருக்கின்றனர். இந்த டிரெய்லர் எவ்ளோ தடவ பாத்தாலும் சிரிப்பே வரல என கமெண்ட் செய்து வருகின்றனர். வித்யாசாகர் இசை தவிர டிரெய்லரில் எதுவும் இல்லை என ரசிகர்கள் ஆதங்கப்படுகின்றனர். தமிழின் சிறந்த காமெடி படங்களில் ஒன்றான தேசிங்கு ராஜா பெயரையாவது விட்டு வச்சிருக்கலாமே..!
News July 5, 2025
IND Vs BAN கிரிக்கெட் தொடர் மாற்றம்?

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஆக.17, 20 & 23-ல் ஒருநாள் மற்றும் 26, 29 & 31 ஆகிய நாள்களில் டி20 போட்டிகளில் விளையாட இருந்தது. அங்கு நிலவும் அரசியல் சூழலால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி வங்கதேசம் செல்ல முடியாத நிலையில், ஏன் வங்கதேச அணியை இந்தியாவுக்கே அழைத்து கொல்கத்தா, ராஞ்சி போன்ற நகரங்களில் தொடரை நடத்தக்கூடாது என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
News July 5, 2025
இன்றே உலகம் அழியும் நாள்? அதிர்ச்சி கணிப்பு

‘புதிய பாபா வாங்கா’ என அழைக்கப்படும் ரியோ தாட்சுகி, இன்று ஜப்பானை மிகப்பெரிய சுனாமி தாக்கும் என கணித்துள்ளார். நேற்று முன்தினம் ககோஷிமாவில் நிலநடுக்கம், ஷின்மோ எரிமலை வெடிப்பு ஏற்பட்டதால், அவரது கணிப்பு உண்மையாகிவிடுமோ என மக்கள் அஞ்சுகின்றனர். பலர் சுற்றுலாப் பயணங்களை ரத்து செய்துள்ள போதிலும், ஜப்பான் வானிலை மையம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.