News April 23, 2025

GBU விவகாரம்.. அப்பா சொன்னது பொய்: பிரேம்ஜி

image

‘குட் பேட் அக்லி’ படம் இளையராஜாவின் பாட்டால் தான் ஓடியது என கங்கை அமரன் சமீபத்தில் பேசியது வைரலானது. ஆனால், அதை மறுத்துள்ள அவரது மகன் பிரேம்ஜி, அனைவருக்குமே உண்மை தெரியும் எனவும், அஜித்தின் படம் அஜித்தால் மட்டுமே ஓடும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், எனது அண்ணனுக்கு ஒரு பிரச்னை என்றால் நான் குரல் கொடுப்பது போன்று, எனது அப்பாவும் அவருடைய அண்ணனுக்காக குரல் கொடுத்ததாக பிரேம்ஜி கூறியுள்ளார்.

Similar News

News August 11, 2025

இன்றே கடைசி: AIIMS-ல் 3,500 பணியிடங்கள்

image

நாடு முழுவதும் உள்ள AIIMS ஹாஸ்பிடல்களில் 3,500 நர்ஸிங் ஆபிஸர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். B.Sc Nursing அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி கொண்டவர்கள் <>இங்கே <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 முதல் 30. SC/ST-க்கு 5 ஆண்டுகளும், OBC-க்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது. Preliminary தேர்வு வரும் செப்.14, Mains தேர்வு செப்.27 நடைபெறும்.

News August 11, 2025

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழை எச்சரிக்கை

image

ஆக.13-ல் வடமேற்கு, அதனையொட்டி மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இன்றும், நீலகிரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.

News August 11, 2025

இந்த டிரெண்டிங் ‘#’ சின்னத்தின் கதை தெரியுமா?

image

இன்று அனைவருக்கும் தெரிந்த ‘#’ சின்னம் பண்டைய காலங்களில், எடையை (Pound) குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. அமெரிக்கா, கனடாவில் எண் #1, #2 என கணிதத்தில் குறிப்பிடும் வழக்கமும் இருந்துள்ளது. இதிலுள்ள குறுக்கு கோடுகளினால் இது ‘ஹேஷ்’ என பெயர் பெற்றது. 2007-ல் கிரிஸ் மெஸ்ஸினா என்பவர், டிவிட்டரில் ஒரு Topic-ஐ ஹைலைட் பண்ண பயன்படுத்திய பிறகு, இந்த ‘#’ டிரெண்டிங்கில் இடம் பெற்று விட்டது.

error: Content is protected !!