News April 15, 2025
₹100 கோடி வசூல்..ரசிகர்களால் கொண்டாடப்படும் GBU

அஜித் – ஆதிக் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் படம் வெளியான ஐந்தே நாட்களில் ₹100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக ரோமியோ பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Similar News
News January 17, 2026
UPI மூலம் PF பணத்தை எடுக்கலாம்!

ஏப்ரல் 1 முதல் EPF பணத்தை UPI மூலம் எடுக்க முடியும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு PF நேரடியாக மாற்றப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். UPI PIN-ஐ உள்ளிடுவதன் மூலம் சில நொடிகளில் பணத்தை எடுக்க முடியும் என்றும், இந்தக் கொள்கையை செயல்படுத்துவதற்கான சிக்கல்களை தீர்ப்பதில் EPFO கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
News January 17, 2026
கனவில் பாம்பு வருதா? இதுதான் அர்த்தம்

சிலருக்கு பாம்பு அடிக்கடி கனவில் வந்து கொண்டே இருக்கும். இதற்கு அர்த்தம் இருப்பதாக ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. ராகு தசை, கேது தசை நடக்கும்போது, அப்படி கனவு வருமாம். ஒற்றை நல்ல பாம்பை கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டை பாம்புகளை கண்டால் நன்மைகள் நடக்கும். பாம்பு கடித்துவிட்டதாக கனவு வந்தால் பணம் கொட்டுமாம். உங்க கனவுல பாம்பு வந்திருக்கா?
News January 17, 2026
நெருக்கமான காட்சிக்கு NO சொன்ன தமன்னா

நடிகை தமன்னா ஒரு நேர்காணலில், தனது திரை வாழ்க்கையின் தொடக்கத்தில் தான் சந்தித்த சிரமங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். மூத்த நடிகர்களுடன் நெருக்கமாக காதல் காட்சிகளில் நடிக்க கேட்டபோது, எனக்கு சங்கடமாக இருந்ததால் மறுத்துவிட்டேன். இதனால் இயக்குநர், கதாநாயகியை மாற்றுமாறு எனக்கு அழுத்தம் கொடுக்க முயன்றார். இருப்பினும், நான் சம்மதிக்கவில்லை. பின்னாளில் அவரே மன்னிப்பு கேட்டதாக நினைவு கூர்ந்துள்ளார்.


