News April 27, 2025
சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்

தமிழின் ட்ரெண்டிங் நடிகை கயாது லோஹர், சிம்புவின் 49-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அசாமில் பிறந்த இவர், ’டிராகன்’ படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்திருக்கிறார். இதற்கு முன் அவர் தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சிம்புவுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியிருப்பது அவரது திரை வாழ்வில் திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News December 4, 2025
IQ என்றால் என்னனு தெரியுமா?

ஒருவரின் நுண்ணறிவுத்திறன் பற்றி பேசும்போது அடிக்கடி உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை IQ (Intelligence Quotient). இது மூளை, புதிய விஷயங்களை எவ்வளவு விரைவாக கற்றுக்கொள்கிறது, சிக்கல்களை எப்படி தீர்க்கிறது, தர்க்கரீதியாக எப்படி சிந்திக்கிறது என்பதை அளவிடும் ஒரு அளவீடு ஆகும். ஒருவரின் சராசரி அளவீடு 100. அதற்கு மேல் இருந்தால் அவர் அதிக அறிவாற்றல் கொண்டவர் என அர்த்தம். உங்க IQ எவ்வளவுனு நினைக்கறீங்க?
News December 4, 2025
பிஸ்கெட்டில் துளை இருப்பது ஏன் தெரியுமா?

பலரது ஃபேவரைட்டாக இருக்கும் பிஸ்கெட்டில் துளைகள் இருப்பது ஏன் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? பிஸ்கெட்டில் உள்ள துளைகள் ‘Dockers’ என அழைக்கப்படுகிறது. பேக்கிங் செய்யும்போது மாவு மிகவும் உப்பிவிடக்கூடாது எனவும் பிஸ்கெட் கிரிஸ்பியாக வரவேண்டும் என்றும் இந்த செய்முறை பின்பற்றப்படுகிறது. இப்படி செய்வதால் பிஸ்கெட் உடையாமலும் இருக்குமாம். 1% பேருக்கு மட்டுமே தெரியும், SHARE THIS.
News December 4, 2025
BREAKING: இன்றே தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவு

திருப்பரங்குன்றத்தில் விதிக்கப்பட்டிருந்த 144 தடையை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் வழக்கை மீண்டும் ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வருகிறார். அப்போது மதுரை காவல் ஆணையர் மற்றும் கலெக்டரிடம் கோர்ட் உத்தரவை ஏன் நிறைவேற்றவில்லை என அவர் கேள்வி எழுப்பினார். மேலும், தீபத்தூணில் இன்று இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


