News April 2, 2024

ஆண்ட்ரியா உடன் நடிக்கும் கவின்

image

‘டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஸ்டார்’. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில், கவினின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் விக்ரனன் அசோக் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தில், கவினுடன், நடிகை ஆண்ட்ரியா கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Similar News

News January 15, 2026

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானா?

image

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 100 நாள்களை வெற்றிகரமாக கடந்து டாப் 4-ல் திவ்யா, அரோரா, சபரி, விக்ரம் உள்ளனர். டைட்டில் வின்னரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் திவ்யா முன்னிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2-வது இடத்தில் சபரியும், 3-வது இடத்திற்கான போட்டியில் விக்ரம், அரோரா இடையே இழுபறி நீடிப்பதாகவும் கூறப்படுகிறது. யார் டைட்டில் வின்னர் ஆக வேண்டும்? கமெண்ட்ல சொல்லுங்க

News January 15, 2026

பொங்கல் பணம்.. CM ஸ்டாலின் அதிர்ச்சி

image

₹3,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு நேற்று வரை தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 7,80,764 பேர் பொங்கல் தொகுப்பை பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. தென் சென்னையில் 95% பேர் மட்டுமே பொங்கல் தொகுப்பை வாங்கியுள்ளனர். பொங்கல் பரிசு தேர்தலில் எதிரொலிக்கும் என நினைத்திருந்த திமுகவுக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News January 15, 2026

துர்கா ஸ்டாலினுடன் ஜாய் கிரிசில்டா

image

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான், தன் குழந்தையின் தந்தை என்பதை நிரூபிக்க கோர்ட் படியேறி ஜாய் கிரிசில்டா போராடி வருகிறார். முன்னதாக, CM ஸ்டாலினை அப்பா என குறிப்பிட்டு, எனக்கு நீதி பெற்றுத் தாருங்கள் எனக் கோரியிருந்தார். இந்நிலையில் CM ஸ்டாலினிடம் இருந்து இன்று ₹100 பொங்கல் படி பெற்றதாகவும், துர்கா அம்மாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றதாகவும் கூறி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!