News April 15, 2025
வினோத் காம்ப்ளிக்கு உதவிக்கரம் நீட்டிய கவாஸ்கர்

உடல்நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் மருத்துவ செலவுக்கு சுனில் கவாஸ்கரின் தொண்டு நிறுவனம் உதவ முன்வந்துள்ளது. அவரின் சிகிச்சைக்காக மாதம் ₹30,000 வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்நாள் முழுவதும் இந்ததொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கரின் சிறுவயது நண்பரான காம்ப்ளி 104 ODIs, 17 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
Similar News
News April 18, 2025
அதிரடியால் புதிய சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்

MI-க்கு எதிரான போட்டியில் SRH-ன் டிராவிஸ் ஹெட் அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இப்போட்டியில் 28 ரன்கள் எடுத்தது மூலம், IPL வரலாற்றில் 1000 ரன்களை வேகமாக கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை ஹெட் படைத்தார். இந்த மைல்கல்லை 575 பந்துகளில் அவர் எட்டினார். இந்தப் பட்டியலில் ரஸ்ஸல் (545), கிளாசென் (594), சேவாக் (604), மேக்ஸ்வெல் (610), யூசுப் பதான் (617) மற்றும் நரைன் (617) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
News April 18, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 18) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News April 18, 2025
விடுமுறை: மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை

கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, ▶தண்ணீர் அதிகம் பருகுங்கள் ▶சிறுவர்களுக்கான புத்தகம் வாசியுங்கள் ▶பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள் ▶அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள் ▶திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்.