News May 25, 2024
சஞ்சு சாம்சனை விமர்சித்த கவாஸ்கர்

தனது தவறான ஆட்டம் காரணமாகவே இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற முடியவில்லை என கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் தவறான ஷாட்டை அவர் தேர்வு செய்ததே ராஜஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த அவர், உலகக் கோப்பை டி20 போட்டியில் தனது வாய்ப்பை 2 கைகளாலும் அவர் கைப்பற்றி தனது இடத்தை உறுதிபடுத்தி கொள்வார் என்றார். நேற்றைய போட்டியில் 10 ரன்களில் சஞ்சு சாம்சன் அவுட் ஆனார்.
Similar News
News March 6, 2026
தாயுமானவர் பொன்மொழிகள்

*நல்ல மனதுக்கு உலகம் நல்லதாகவும், கெட்ட மனதுக்கு உலகம் கெட்டதாகவும் தென்படுகிறது *நல்லெண்ணம் வளர வளர அது நமது உடலில் ஊறியதாக ஆகிவிடுகிறது. பிறகு கெட்ட எண்ணம் என்பதே வருவதில்லை. இது எல்லாவற்றிற்கும் அடிப்படை பழக்கமே *நல்ல எண்ணம் நமக்கு நல்ல நலம் தந்து, வாழ்வினை வளமடையச் செய்கிறது *ஒழுக்கத்தில் நிலைநின்றவர்களுக்கு மன உறுதி அதிகரிக்கிறது. பின்னர் அதுவே ஆத்ம சக்தியாக வடிவம் எடுக்கிறது.
News March 6, 2026
ஈரானின் உயர் தலைவரை தேர்வு செய்வேன்: டிரம்ப்

ஈரானின் புதிய உயர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் தனது பங்கு இருக்கும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உயர் தலைவராக கமேனியின் மகன் முஜ்தபா பதவியேற்பதை தான் விரும்பவில்லை என தெரிவித்த அவர், அமைதியை நிலைநாட்டக் கூடிய ஒருவர் பதவிக்கு வரவேண்டும் என்றார். ஈரானியர்கள் நேரத்தை வீணடித்து கொண்டிருப்பதாகவும், வெனிசூலாவை போல ஈரானின் உயர் தலைவர் தேர்வில் தனது தலையீடு இருக்கும் எனவும் அவர் கூறினார்.
News March 6, 2026
மாணவர்களை தவிக்க விட்ட திமுக அரசு: அன்புமணி

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் சாதி & வருவாய்ச் சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அதுபோல, கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கான அடங்கல் ஆவணமும் உழவர்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே, வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை திமுக அரசு முடிவுக்கு கொண்டு வருமாறு அவர் X பதிவில் வலியுறுத்தியுள்ளார்.


