News April 15, 2024
பாண்டியாவின் கேப்டன்சியை விமர்சித்த கவாஸ்கர்

மும்பை கேப்டன் பாண்டியாவின் தலைமைப் பண்பு குறித்து கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். சிஎஸ்கேவுக்கு எதிராக பாண்டியாவின் பந்துவீச்சும், கேப்டன்சியும் அனுபவ வீரரை போல் இல்லை. தோல்விக்கு இதுவும் ஒரு காரணம் என பாண்டியாவை அவர் விமர்சித்துள்ளார். முன்னதாக சிஎஸ்கேவுக்கு எதிராக 3 ஓவர் பந்துவீசிய பாண்டியா, 43 ரன்களை விட்டுக்கொடுத்தார். குறிப்பாக அவரின் 20ஆவது ஓவரில், தோனி 3 சிக்சர்களை பறக்க விட்டார்.
Similar News
News January 5, 2026
இது இனி உங்க தலையிலும் ஒட்டியிருக்கலாம்!

Zomato CEO தீபிந்தர், தலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த கருவியின் பெயர் ‘Temple’. டெஸ்டிங் ஸ்டேஜில் உள்ள இது, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகவும், ஒரே வேகத்திலும் உள்ளதா என்பதை கண்காணிக்கிறதாம். மேலும், இதன் மூலம் நரம்பியல் ஆரோக்கியம், மூளையின் செயல்திறனை கவனிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. மக்களின் பயன்பாட்டிற்கு வந்தால், இது வருங்காலத்தில் அனைவரின் தலையில் ஒட்டிக் கொண்டிருக்கலாம்.
News January 5, 2026
வடிவேலு போல EPS: அமைச்சர் சிவசங்கர்

EPS பேசும்போது வடிவேலு காமெடிதான் நினைவுக்கு வருகிறது என அமைச்சர் சிவசங்கர் கிண்டலடித்துள்ளார். அந்த காமெடி சீனை விவரித்த அவர், டீ கடையில் 2 பேர் பேப்பர் படிக்கும்போது தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல தலையிட்டு வடிவேலு உதார் விடுவார். அதேபோல தான், அரசின் திட்டங்கள் எல்லாம் தன்னால் வந்தது என EPS நடிக்க வேண்டியிருப்பதாக கூறி அவரை சாடியுள்ளார்.
News January 5, 2026
கவர்னர் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்

குடியரசு தின விழாவையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி அனைத்து கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். இந்நிலையில், இந்த விருந்தை புறக்கணிப்பதாக TN காங்., அறிவித்துள்ளது. TN மக்களால் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், TN மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


