News May 14, 2024
சூர்யகுமார் யாதவை புகழ்ந்த கவுதம் கம்பீர்

சூர்யகுமார் யாதவை கொல்கத்தா அணியிலிருந்து தவற விட்டதற்கு வருந்துவதாக கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கொல்கத்தா கேப்டனாக 7 வருடம் இருந்த போது, சூர்யகுமார் யாதவை சரியாக பயன்படுத்தவில்லையே என்று வருத்துவதாக கூறிய அவர், அதற்கு மற்ற பேட்ஸ்மேன்களின் வருகை முக்கிய காரணமாக இருந்ததாக தெரிவித்தார். வீரர்களின் திறமையை கண்டறிந்து, உலகிற்கு காண்பிப்பதே ஒரு கேப்டனின் முக்கிய பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
Similar News
News March 23, 2026
கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சியான தகவல்!

திமுக, அதிமுக தேர்தல் அறிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஓரிரு நாள்களில் வெளியாக உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் நடைபாதை வியாபாரிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கியுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் EPS அறிவித்துள்ளார். இதனிடையே, திமுக, அதிமுக 2 கட்சிகளும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் பயிர்க் கடன், நகைக்கடன் குறித்த அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News March 23, 2026
புதுச்சேரியில் அதிமுக மவுசு குறைகிறதா?

புதுச்சேரி NDA கூட்டணியில் அதிமுகவுக்கு 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், 2021 தேர்தலில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 3 குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், 1974, 1977-78 காலகட்டங்களில் அதிமுகவே புதுச்சேரியில் ஆட்சி செய்தது. இந்நிலையில், 2 தொகுதிகள் என்ற நிலைக்கு தற்போது அதிமுக வந்துள்ளதால், புதுச்சேரியில் அக்கட்சியின் தாக்கம் குறைகிறதா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News March 23, 2026
₹30,000 சம்பளம், 730 காலியிடங்கள்… APPLY NOW

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் 730 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்சிகியூட்டிவ், சீனியர் ஆபிசர், மேனேஜர் உள்ளிட்ட பணிகளுக்கு 25-39 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி: டிப்ளமோ/B.E/ B.Tech / M.C.A/ CA. சம்பளம்: ₹30,000 – ₹2,80,000 வரை. தேர்வு முறை: ஆன்லைன், நேர்முகத் தேர்வு. மார்ச் 25-க்குள் இந்த <


