News May 7, 2025

வணிக பயன்பாட்டுக்கான GAS சிலிண்டர் விலை குறைந்தது

image

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் (GAS) சிலிண்டர் விலை ₹15.50 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் இன்று (மே 1) முதல் ஒரு சிலிண்டர் ₹1,906-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எவ்வித மாற்றமுமின்றி ஒரு சிலிண்டர் ₹868.50-க்கு விற்பனையாகிறது.

Similar News

News December 6, 2025

நெல்லை: கரண்ட் கட்? இனி Whatsapp மூலம் எளிய தீர்வு..!

image

நெல்லை மாவட்டத்தில் உங்க பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், எரியாத தெரு விளக்குகள் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகாரளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News December 6, 2025

ராமேஸ்வரம்-காசி இலவச ஆன்மிக பயணம் தொடங்கியது!

image

ஏழை, வயதான பக்தர்களுக்காக ராமேஸ்வரம் – காசி இலவச ஆன்மிக சுற்றுப்பயண திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தாண்டுக்கான பயணத்திற்கு 600 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வழியனுப்பி வைத்த அமைச்சர் சேகர்பாபு, அரசு சார்பில் இதற்காக ₹1.50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த 4 ஆண்டுகளில் ₹3.80 கோடி செலவில், 1,520 பேர் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தார்.

News December 6, 2025

கணவரை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்

image

ஆண்கள் பற்றாக்குறையால் கணவரை வாடகைக்கு எடுக்கும் நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா?. ஆம், ஐரோப்பா நாடான லாட்வியாவில் இந்த விநோதம் நடக்கிறது. அங்கு 116 பெண்களுக்கு 100 ஆண்கள் மட்டுமே இருக்கின்றனர். அதிலும், பெரும்பாலானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் இளம் பெண்கள் ‘Husbands for Rent’ முறைக்கு அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!