News May 17, 2024
எடை குறைப்புக்கு உதவும் பூண்டு

பூண்டு உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமல்லாமல், கொழுப்பு செல்கள் உருவாவதை தடுப்பதன் மூலம் எடை இழப்புக்கு உதவுகிறது. பூண்டு தெர்மோஜெனீசிஸை அதிகரிக்கிறது, இது அதிக கொழுப்புகளை எரிக்கவும், எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. படுக்கைக்கு முன் ஒரு பல் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. பூண்டு வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை உடலுக்கு அளிக்கிறது.
Similar News
News January 14, 2026
குன்னூரில் இப்பகுதியில் செல்ல தடை

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையினால் பல்வேறு இடங்களில் மண் சரிவு மற்றும் மரம் முறிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் குன்னூர் – வெலிங்டன் இடையே உள்ள முக்கிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மற்றும் பாறைகள் சரிந்துள்ளன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
News January 14, 2026
ராமதாஸை சமாதானம் செய்ய முயல்கிறதா பாஜக?

அன்புமணி ஏற்கெனவே இணைந்துவிட்டதால், அதிமுக கூட்டணியில் ராமதாஸ் இணைய தயக்கம் காட்டுவதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், ராமதாஸ் தரப்புடன் பாஜக முக்கிய தலைவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாகவும், மோடி தலைமையில் ஜன.23-ல் மதுராந்தகத்தில் நடைபெறவிருக்கும் NDA கூட்டணித் தலைவர்கள் <<18852821>>பொதுக்கூட்டத்தில் <<>>அவரை பங்கேற்க வைக்க முயற்சி மேற்கொள்வதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
News January 14, 2026
பிரபல நடிகர் காலமானார்

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக போராடி வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மார்க்ஸ் கில்பர்ட்(67) காலமானார். ஹாலிவுட்டில் வெளிவந்த ‘ராம்போ III’ படத்தின் மூலம் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த இவர், ‘மாஸ்டர் ஆஃப் தி கேம்’, ‘கோனி’ உள்ளிட்ட பல பிரபலமான படங்களில் நடித்துள்ளார். மார்க்ஸ் மறைவுக்கு இந்திய சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


