News May 11, 2024
பூண்டு விலை ₹160-₹320

அன்றாடம் சமையலுக்கு பயன்படும் அத்தியாவசிய பொருளான பூண்டு விலை, உயர்ந்துகொண்டே வருவது இல்லத்தரசிகளை கலக்கமடையச் செய்துள்ளது. 10 நாட்களுக்குமுன், கிலோ ₹100-₹200 வரை விற்பனையான பூண்டு தற்போது ₹160-₹320ஆக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரத்து குறைந்ததாலும், வியாபாரிகள் பதுக்கி வைப்பதாலும் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், விலையை கட்டுக்குள் வைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 20, 2025
ராசி பலன்கள் (20.09.2025)

➤மேஷம் – துணிவு ➤ரிஷபம் – பக்தி ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – நலம் ➤சிம்மம் – தனம் ➤கன்னி – இன்பம் ➤துலாம் – போட்டி ➤விருச்சிகம் – பெருமை ➤தனுசு – செலவு ➤மகரம் – உறுதி ➤கும்பம் – சுகம் ➤மீனம் – ஆக்கம்.
News September 19, 2025
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய 140 புத்தகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகங்கள் ஷரியா சட்டங்கள் மற்றும் தங்களது கொள்கைகளுக்கு எதிராக இருப்பதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாலினம் மற்றும் வளர்ச்சி, தகவல் தொடர்பில் பெண்களின் பங்களிப்பு, பெண்களின் சமூகவியல் உள்ளிட்ட பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. ஆப்கனில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
News September 19, 2025
சாராய பணத்தில் திமுகவின் விழா: அண்ணாமலை

சாராயம் விற்ற பணத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடத்தப்பட்டதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். கரூரில் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலின் யாருக்கு திருடர், ஊழல்வாதி பட்டம் கொடுத்தாரோ (செந்தில் பாலாஜி) அவரை வைத்தே இன்று முப்பெரும் விழா நடத்தியிருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். மேலும், தமிழகத்தில் திமுகவுக்கு காங்கிரஸ் எடுபிடி வேலை செய்வதாக சாடினார்.