News April 14, 2024
கங்குவா மிரட்டல் போஸ்டர் வெளியானது

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘கங்குவா’ படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் இரண்டு சூர்யா இடம்பெற்றிருப்பதால், படத்தில் சூர்யா இரண்டு கேரக்டரில் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் எப்படி இருக்கிறது என கமெண்ட் செய்யுங்கள்.
Similar News
News November 27, 2025
சற்றுமுன்: தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

2022 அக்.13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இந்த வழக்கில் கைதான சதீஷூக்கு தூக்குதண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட் சற்றுமுன் தீர்ப்பளித்துள்ளது.
News November 27, 2025
Truecaller-ல் உங்கள் பெயர் காட்டக்கூடாதா? இதோ டிரிக்

Truecaller-ன் காலர் லிஸ்டில் இருந்து உங்கள் பெயரை நீக்க முடியும். ➤இதற்கு <
News November 27, 2025
இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய நினைத்தோம்: SA கோச்!

2-வது டெஸ்டின், 2-வது இன்னிங்ஸில் SA டிக்ளேர் செய்ய ஏன் நீண்ட நேரம் எடுத்து கொண்டது என்ற கேள்விக்கு SA கோச்சின் பதில் கடும் விமர்சனத்தை பெற்றுள்ளது. சுக்ரி கொன்ராட் ‘We wanted them to really grovel’ என்ற வாக்கியத்தை உபயோகித்தார். இதில் Grovel என்றால் ஊர்ந்து சென்று அடிபணிவது என பொருள் பெறும். அதாவது அவர், இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய நினைத்தோம் கூறினார். இதுகுறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க?


