News November 18, 2024
கம்பீருக்கு கங்குலி ஆதரவு

AUS வீரர்கள் கூறும் கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதில் தவறில்லை என கங்குலி தெரிவித்துள்ளார். ரிக்கி பாண்டிங் விமர்சனத்துக்கு கம்பீரின் பதிலடி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஆஸி. வீரர்கள் எப்போதும் அப்படிதான் பேசுவார்கள், அவர்களின் பாணியிலேயே கம்பீர் பதிலடி கொடுத்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். முன்னதாக கோலி, ரோஹித் ஃபார்ம் பற்றி பாண்டிங் பேசியதற்கு கம்பீர் கடும் எதிர்வினையாற்றி இருந்தார்.
Similar News
News March 23, 2026
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்!

தமிழகத்தில் இன்று முதல் மார்ச் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, தூத்துக்குடி, அரியலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று லேசான மழை பதிவானது.
News March 23, 2026
மாணவர்கள் தற்கொலையை தடுக்க புதிய கொள்கை

மாணவர்களின் மனநலம் பாதுகாப்பு, தற்கொலை தடுப்புக்கு TN அரசு புதிய கொள்கையை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள், ஆலோசனை மையங்கள் மூலம் மாணவர்களின் தனித் திறனை ஊக்குவிப்பதுடன், நண்பர்கள் இடையே ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளும் நல் ஆதரவு நடவடிக்கைகளை தொடங்க வலியுறுத்தியுள்ளது. மனநல ஆலோசனைகளுக்கு 14416, 14417, 104, 1098, 181 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News March 23, 2026
இதற்கா கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறீர்கள்?… நயினார்

கடலூர் GH-ல் மின்சாரம் இல்லாமல் மொபைல் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தது திமுக அரசின் நிர்வாக தோல்விக்கான சான்று என்று நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கற்காலம் போன்று சிகிச்சை அளிக்கவா ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கோடிக்கணக்கான நிதி ஒதுக்கப்படுகிறது என்றும், திமுக அரசின் ஈயம் பூசும் வேலையை தமிழக மக்கள் இனி துளியும் நம்ப மாட்டார்கள் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.


