News August 6, 2024
SCREEN SHOT மூலம் பணத்தை திருடும் கும்பல்: சைபர் கிரைம்

போலி SCREEN SHOT அனுப்பி அப்பாவி மக்கள் வங்கிப்பணத்தை மர்ம நபர்கள் திருடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். ₹200, ₹400 தவறாக அனுப்பி விட்டதாக கூறி, முதலில் SCREEN SHOT அனுப்புவதாக சைபர் கிரைம் போலீஸ் கூறியுள்ளது. பிறகு அந்த பணத்தை திருப்பி அனுப்ப QR கோடை அனுப்புவர். அதை நம்பி அதில் பணம் அனுப்பினால், வங்கிப்பணம் மொத்தத்தையும் திருடுவதாக சைபர் கிரைம் போலீஸ் எச்சரித்துள்ளது.
Similar News
News April 2, 2026
டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த KKR

SRH அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற KKR பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் KKR களமிறங்கும் நிலையில், SRH அணியில் ஷிவாங் குமார் இணைந்துள்ளார். முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வி அடைந்ததால் முதல் வெற்றிக்காக இன்று கடும் போராட்டம் இருக்கும். கடந்த போட்டியில் இரு அணிகளின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், பவுலிங்கே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
News April 2, 2026
EPS மீது தனபால் கடும் அதிருப்தி!

அவிநாசி தொகுதிக்காக விருப்பமனு அளித்தும், தேர்தலில் போட்டியிட விருப்பமா என யாருமே கேட்கவில்லை என தனபால் வேதனை தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், ஜெ., மறைவுக்கு பிறகு ஆட்சிக்கு எதிராக 18 MLA-க்கள் போர்க்கொடி தூக்கினர். அப்போது சபாநாயகர் பொறுப்பில் இருந்த நான்தான், அவர்களை டிஸ்மிஸ் செய்து ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். ஆனாலும் தற்போது கட்சிக்குள் எனக்கு மரியாதை இல்லை என கூறியுள்ளார்.
News April 2, 2026
BREAKING: புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமனை ECI மாற்றியுள்ளது. அவருக்கு பதிலாக புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார். 1992-ம் ஆண்டு IPS அதிகாரியாக தேர்வான இவர், சென்னை காவல் ஆணையர், கோவையில் துணை ஆணையராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தமிழ்நாட்டை உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய அதிகாரியாகவும் இவர் செயல்பட்டார்.


