News April 6, 2024
குழந்தை கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கைது

நாடு முழுவதும் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் கும்பலை சிபிஐ கைது செய்துள்ளது. டெல்லி, ஹரியானா மாநிலங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக வைத்திருந்த 3 பச்சிளம் குழந்தைகளை அவர்கள் மீட்டனர். ரூ.5.5 லட்சம் ரொக்கம் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குழந்தைகளை கடத்தி, விற்று வந்த 7 பேர் கும்பலையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
Similar News
News August 27, 2025
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாள்கள் விடுமுறை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 – 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு செப்.15 – 25-ம் தேதி வரையிலும், 9, 10-ம் வகுப்பு செப்.15 – 26-ம் தேதி வரையிலும், 11, 12-ம் வகுப்புகளுக்கு செப்.10 – 25-ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடக்கவுள்ளன. செப்.27 முதல் அக்.5-ம் தேதி வரை 9 நாள்கள் தொடர் விடுமுறையாகும். SHARE IT.
News August 27, 2025
பிரபல கிரிக்கெட்டருக்கு புற்றுநோய்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் தோல் புற்றுநோய்க்கான சிகிச்சையில் இருக்கும் செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2015-ல் ODI உலக கோப்பையை வென்ற ஆஸி., கேப்டனான இவர், மூக்கில் இருந்து புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதி நீக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார். முன்னதாக 2006-ல் இவருக்கு இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
News August 27, 2025
பொது அறிவு வினா- விடை பதில்கள்!

காலை 11 மணிக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள். கேள்விக்கு <<17531359>>இங்கே <<>>கிளிக் செய்யவும்.
1. 2009
2. பானு அத்தையா
3. 33%
4. யென்
5. 1912
எத்தனை கேள்விக்கு சரியாக பதில் சொன்னீங்க?