News September 6, 2024
விநாயகர் சதுர்த்தி: பங்குச்சந்தை விடுமுறையா?

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற குழப்பம் இருந்த நிலையில், வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈக்விட்டி, ஈக்விட்டி டெரிவேட்டிவ், செக்யூரிட்டி லெண்டிங் அண்ட் பாரோயிங் பிரிவுகள் முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவிலேயே முடிவடைந்தன. மும்பை பங்குச்சந்தை 151, நிஃப்டி 54 புள்ளிகள் சரிவடைந்தன.
Similar News
News July 11, 2025
கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்: ராமதாஸ்

தஞ்சை, திருவாரூா் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் தனியாா் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, பாமக மாவட்டச் செயலா் ம.க.ஸ்டாலின் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் பங்கேற்ற பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் 2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் எனது விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
News July 11, 2025
20 தொகுதிகள்… திமுகவை நெருக்கும் மதிமுக

20 தொகுதிகளை ஒதுக்கக்கோரி திமுகவை மதிமுக நெருக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரத்திற்கு 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மதிமுக உள்ளது. இதை சுட்டிக்காட்டி அண்மைகாலமாக மதிமுக பேசி வருகிறது. மு.க. ஸ்டாலினிடம் 20 தொகுதிகள் பட்டியலை அளித்து, இரட்டை இலக்க தொகுதிகளை ஒதுக்கும்படி வைகோ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
News July 11, 2025
ODI கேப்டன்: ரோஹித் OUT! சுப்மன் கில் IN!

இளம் வீரர் சுப்மன் கில் இந்திய ODI அணியின் கேப்டனாக பொறுப்பேற்க இருக்கிறார் என தகவல் வெளிவந்துள்ளது. 2027 ODI உலக கோப்பையை மையப்படுத்தி இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது. இது குறித்து தற்போதைய ODI கேப்டன் ரோஹித் சர்மாவிடமும் BCCI பேச்சு வார்த்தை நடத்தியதாகவும், அடுத்து நடைபெறும் இலங்கை தொடரில் கில் கேப்டனாக பொறுப்பேற்பார் என்றும் கூறப்படுகிறது.