News August 26, 2025

விநாயகர் சதுர்த்தி: பூக்கள் விலை கிடுகிடு உயர்வு!

image

விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகளையொட்டி மதுரை, தோவாளை, ஓசூர் உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் பூக்கள் விலை விண்ணைத் தொட்டுள்ளன. மதுரை சந்தையில் கடந்த சில நாள்களாக ₹600-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை இன்று ₹2,000 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ பிச்சிப்பூ ₹1,200, முல்லை ₹1,000, செண்டுமல்லி ₹130, வாடாமல்லி ₹250-க்கு விற்பனையாகிறது. உங்கள் ஊரில் பூக்கள் விலை என்ன?

Similar News

News March 3, 2026

தமிழக தேர்தல் தேதி.. சற்றுமுன் வெளியான தகவல்

image

தமிழக தேர்தல் தேதியை ஒட்டுமொத்த வாக்காளர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், மார்ச் 10-க்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் தேதி அறிவிக்கப்படலாம் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (மார்ச் 5) கேரளா செல்லும் CEC அடங்கிய குழு, 9, 10-ம் தேதிகளில் மேற்கு வங்கத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். எனவே, அதன் பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளனராம்.

News March 3, 2026

சாதி மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா? அதிமுக

image

சட்டம் ஒழுங்கை ஒரு பொருட்டாக கருதாமல் விளம்பர ஆட்சி நடத்திய திமுக அரசின் அலட்சிய போக்கால், நாங்குநேரியில் கொடூரக் கொலைகள் அரங்கேறியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். தென் மாவட்டங்களில் தொடர்ந்து நடக்கும் சமூக ரீதியான மோதல்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தது திமுக அரசு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தேர்தல் நேர அறுவடைக்கு சமூக மோதல்களை திமுக வளர்த்து விடுகிறதா எனவும் அவர் சாடியிருக்கிறார்.

News March 3, 2026

இந்திய அணிக்கு ஷாக்: சஞ்சு சாம்சனுக்கு தடையா?

image

WI-க்கு எதிராக அபாரமாக விளையாடிய சஞ்சு சாம்சனுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. Winning Shot-ஐ அடித்த பிறகு, அவர் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் முன், ஹெல்மெட்டை கழற்றி கிரவுண்டில் வீசினார். இது ICC வீரர்களின் நடத்தை விதி 2.2-ன்(கிரிக்கெட் உபகரணங்களை துஷ்பிரயோகம் செய்தால்) கீழ் விதிமீறல் எனப்படுகிறது. தடை விதிக்கப்பட்டால், ENG-க்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவர் விளையாட முடியாது.

error: Content is protected !!