News August 14, 2024
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
Similar News
News November 28, 2025
அதுக்குள்ள இத்தன வருஷம் ஆகிடுச்சா யோகிபாபு?

நக்கல், நகைச்சுவை, குணச்சித்திரம் என தனக்கு வழங்கப்பட்ட கேரக்டர்களை கச்சிதமாக நடித்து, தனது தனித்துவமான உடல்மொழியால் கொண்டாடப்படுபவர் யோகிபாபு. இவர், திரைத்துறையில் அறிமுகமாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அமீர் நடிப்பில் வெளியான ‘யோகி’ படம் மூலம் சினிமாவுக்குள் நுழைந்த அவரது திரை பயணத்துக்கு இடையே சமூக சேவைகளும் உள்ளன. யோகிபாபு படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?
News November 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: பொச்சாவாமை ▶குறள் எண்: 533 ▶குறள்: பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. ▶பொருள்: மறதி உடையவர்களுக்கு, மங்காப் புகழ் இல்லை என்பதே அனைத்தும் கற்றுணர்ந்த அறிஞர்களின் முடிவான கருத்தாகும்.
News November 28, 2025
Gen Z தலைமுறையை நெகிழ்ந்து பாராட்டிய PM மோடி

இந்திய இளைஞர்கள் நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக PM மோடி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவன வளாகத்தை திறந்து வைத்து பேசிய அவர், இன்று Gen Z பொறியளார்கள், வடிவமைப்பாளர்கள், Coding பணிகளை மேற்கொள்பவர்கள், விஞ்ஞானிகள், ராக்கெட் நிலைகள், செயற்கைக்கோள் தளங்கள் ஆகியவற்றிலும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.


