News October 26, 2025
விரைவில் OTTக்கு வரும் காந்தாரா சாப்டர் 1

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா சாப்டர் 1 ₹800 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனிடையே இப்படத்தின் OTT உரிமத்தை அமேசான் ப்ரைம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இம்மாத இறுதியில் தென்னிந்திய மொழிகளில் படம் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளதாம். திரையரங்கு விதிகளின் காரணமாக இந்தியில் மட்டும் நவம்பர் மாதம் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. OTT காந்தாரா பாக்க ரெடியா?
Similar News
News January 17, 2026
10-ம் வகுப்பு போதும், ₹53,000 சம்பளம்.. APPLY NOW!

ரிசர்வ் வங்கியில் மொத்தம் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் சென்னைக்கு OBC பிரிவில் 8, பொதுப்பிரிவில் ஒன்று என மொத்தம் 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ➤சம்பளம்: ₹24,250-₹53,330 ➤கல்வி தகுதி: 10th ➤வயது வரம்பு: 18 – 25. ➤தேர்வு முறை: மொழித் திறன் (Online), நேர்முகத் தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 4. விண்ணப்பிக்க விரும்புவோர் <
News January 17, 2026
U19 WC: இந்திய அணி 238 ரன்களுக்கு ஆல் அவுட்

U19 உலகக்கோப்பையில் வங்கதேசத்துக்கு இந்திய அணி 239 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. தொடக்கத்தில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினாலும், வைபவ் சூர்யவன்ஷி(72), அபிக்யான் குண்டு(80) அரைசதம் அடித்து அணியை மீட்டெடுத்தனர். 39-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு, 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆனால் 48.4 ஓவர்களில் இந்தியா 238 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.
News January 17, 2026
சற்றுமுன்: முட்டை விலை குறைந்தது

வரலாறு காணாத அளவு உச்சம் தொட்ட முட்டை கொள்முதல் விலை சமீபமாக குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று முட்டை கொள்முதல் விலை ₹5.60-லிருந்து ₹5.30 ஆக சரிந்துள்ளது. இதன்மூலம் ஒரே நாளில் ₹30 காசுகள் வரை குறைந்துள்ளது. இதனால், சில்லறை கடைகளில் ₹6 – ₹6.50 வரை முட்டை விற்பனையாவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உங்கள் ஊரில் ஒரு முட்டை எவ்வளவு? கமெண்ட் பண்ணுங்க.


