News October 6, 2025

காந்தாரா 1 மூச்சடைக்க வைத்தது: அண்ணாமலை

image

காந்தாரா சாப்டர் 1 படத்தின் ஒவ்வொரு காட்சியும் தன்னை மூச்சடைக்க வைத்ததாக அண்ணாமலை பதிவிட்டுள்ளார். இது ஒரு உலக தரமான படைப்பு என பாராட்டிய அவர், துளு நாட்டின் கலாச்சாரம், பஞ்சுர்லி, குலிகா தெய்வ வழிபாடு போன்றவற்றை கொடுத்த ரிஷப் ஷெட்டியின் நடிப்பையும், இயக்கத்தையும் வெகுவாக பாராட்டினார். IPS-ஆக பணிபுரிந்த போது, தான் நேரில் பார்த்த மரபுகளை எண்ணி பார்ப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

Similar News

News October 6, 2025

சற்றுமுன்: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹1,400 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் ₹520 உயர்ந்துள்ளது. தற்போது, ஒரு கிராம் ₹11,125-க்கும், ஒரு சவரன் ₹89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் 1 சவரன் 30,000-க்கு மேல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 6, 2025

Attitude காட்டுவது எனக்கு பிடிக்காது: சிராஜ்

image

எந்த நிலையில் இருந்து, இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்தேன் என்பதை எப்போதும் தான் மறக்க மாட்டேன் என சிராஜ் தெரிவித்துள்ளார். லட்சியத்தில் வெற்றி பெற்ற பின்னரும் எளிமையாக இருக்கவே விரும்புவதாகவும், இந்திய அணியின் ஸ்டார் பவுலர் என Attitude காட்டுவது, எப்போதும் தனக்கு பிடிக்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிறுவயது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதை இப்போதும் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News October 6, 2025

CJI மீதே வெடிகுண்டு வீச்சு; 1975-ல் அரங்கேறிய சம்பவம்

image

1975-ல் SC தலைமை நீதிபதி ஏ.என்.ரே கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. அது வெடிக்காததால் காரில் இருந்த CJI-வும் அவரது மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அப்போது, கொலை வழக்கில் கைதாகி இருந்த ஆனந்த மூர்த்தி என்பவருக்கு ஜாமீன் வழங்காததால் அவருடைய ஆதரவாளர்கள் இந்த தாக்குதலை நடத்தினர். இவ்வழக்கில், சந்தோஷ் ஆனந்த் அவதூத் மற்றும் சுதேவானந்த் அவதூத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

error: Content is protected !!