News August 28, 2025
கோர்ட் கதவை தட்டிய கேமிங் நிறுவனங்கள்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை எதிர்த்து, முன்னனி ஆன்லைன் கேமிங் நிறுவனமான A23 கர்நாடகா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இது வரும் 30-ம் தேதி அவசர வழக்காக விசாரிக்கப்பட உள்ளது. கடந்த 20-ம் தேதி லோக் சபாவில் நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததால் தற்போது சட்டமாகியுள்ளது. இதன்படி, ஆன்லைன் கேமிங் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை, ₹1 கோடி அபராதம் விதிக்கப்படும்.
Similar News
News March 27, 2026
சென்னைக்கு வேட்பாளர்களை அறிவிக்காத EPS

அதிமுக இதுவரை மொத்தம் 150 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை 2 கட்டமாக வெளியிட்டுள்ளது. இதில் சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 13-ல் அதிமுக போட்டியிடுகிறது. எனினும் <<19470729>>ராயபுரம் தொகுதியை<<>> தவிர வேறு எந்த தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை பொறுத்து அங்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. மேற்கு ஆசிய போர் காரணமாக ரூபாயின் மதிப்பு ₹94.73 ஆக உள்ளது. இது வாரத்தின் தொடக்கத்தில் எட்டியிருந்த முந்தைய குறைந்தபட்ச சாதனையான ₹93.98-ஐ விடவும் மோசமான நிலையாகும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடந்து வீழ்ச்சியடைந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
News March 27, 2026
KAS, OPS-ஐ எதிர்க்கும் அதிமுக வேட்பாளர்கள் இவர்கள்தான்

செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபியில் V.B.பிரபு போட்டியிடுவதாக அதிமுக அறிவித்துள்ளது. அதேபோல், OPS-ன் சிட்டிங் தொகுதியான போடியில் நாராயணசாமி, வைத்திலிங்கம் வென்ற ஒரத்தநாட்டில் M.சேகர், மனோஜ் பாண்டியனின் சொந்த தொகுதியான ஆலங்குளத்தில் பிரபாகரன் போட்டியிடுகின்றனர். அதேபோல், மீண்டும் அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன் மதுரை வடக்கிலும், மாணிக்கம் சோழவந்தானிலும் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>


