News October 5, 2024

விளையாட்டு துளிகள்

image

➤China Open Tennis: பெலாரஸின் சபலென்காவை வீழ்த்தி செக்குடியரசின் முச்சோவா அரையிறுதிக்கு முன்னேறினார். ➤மகளிர் T20 உலகக் கோப்பை: IND அணியை 58 ரன் வித்தியாசத்தில் NZ அணி வென்றது. ➤U21 உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பில் 25 மீ. ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. ➤காமன்வெல்த் வலு தூக்கும் போட்டியில் புதுச்சேரி காவலர் அனிதா ராய் தங்கப் பதக்கம் வென்றார்.

Similar News

News August 13, 2025

அக்டோபரில் இலவச லேப்டாப் வழங்க அரசு ஆயத்தம்!

image

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப்களை கொள்முதல் செய்வதற்காக <<17382505>>2 நிறுவனங்களை TN அரசு தேர்வு<<>> செய்து அறிவித்துள்ளது. கலை மற்றும் அறிவியல், பொறியியல், வேளாண்மை, மருத்துவக் கல்வி பயிலும் 20 லட்சம் மாணவர்களுக்கு வரும் அக்டோபரில் முதற்கட்டமாக லேப்டாப் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2019 வரை மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டது கவனிக்கத்தக்கது.

News August 13, 2025

TVK என்றால் என்ன? வேல்முருகன் விளக்கம்

image

TVK-வின் விரிவாக்கம் ‘தமிழக வாழ்வுரிமை கட்சி’ தான் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதைவிடுத்து புதிதாக கட்சி ஆரம்பித்த ஒரு நடிகரின் கட்சியை TVK என பொதுமக்கள் அழைப்பது வேடிக்கையாக இருப்பதாக கூறினார். அரசுப்பணிகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென கூறிய அவர், தமிழகத்தில் அதிகளவில் வடமாநிலத்தவர்கள் குடியேறுவதை ஒழுங்கப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

News August 13, 2025

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

image

இந்தோனேசியாவின் மேற்கு பபுவா பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய நேரப்படி நேற்று மாலை 1:54 மணிக்கு, நிலத்தின் அடியில் 39 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. முன்னதாக, ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தோனேசியாவில் 4.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!