News May 15, 2024
பாண்டியாவுக்கு ஆதரவாக பேசிய கம்பீர்

பிளே ஆஃப் வாய்ப்பை மும்பை அணி இழந்ததற்கு ஹர்திக்கின் கேப்டன்சிதான் காரணம் என்று முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி வில்லியர்ஸ் விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த கௌதம் கம்பீர், “வில்லியர்ஸ் கேப்டனாக இருக்கும்போது சாதித்தது என்ன? அவரது கேப்டன்சி வரலாற்றை எடுத்து பாருங்கள், மற்றவர்களின் கேப்டன்சியைவிட மிகவும் மோசமானதாக இருக்கும்” எனக் காட்டமாக கூறினார்.
Similar News
News September 16, 2025
மாடல் அழகியை டேட் செய்யும் ஹர்திக்?

விவாகரத்துக்கு பின், கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா தற்போது மாடல் அழகியான மகிகா ஷர்மாவை டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மகிகா ஷர்மா இன்ஸ்டாவில் பகிர்ந்த Selfie-ல் ஹர்திக் பாண்டியா இருப்பதாக நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி, அவர்கள் டேட்டிங் செய்வதாக பதிவிட்டு வருகின்றனர். 2024 Indian Fashion Awards-ல் Model of the Year என்ற பட்டத்தை வென்ற மகிகா, பல்வேறு விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.
News September 16, 2025
தேவருக்கு பாரத ரத்னா வேண்டும்: EPS

முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்த EPS திட்டமிட்டுள்ளார். டெல்லி சென்றுள்ள EPS இன்று இரவு 8 மணிக்கு அமித்ஷாவை சந்திக்கவுள்ளார். அப்போது அவரிடம் பிரதான கோரிக்கையாக, தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது பற்றி பேசவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு அரசியல் நகர்வுகள், 2026 தேர்தல் குறித்து இருவரும் ஆலோசிக்கவுள்ளனர்.
News September 16, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

RBI நிதிக் கொள்கை கூட்டம் செப்.29-அக்.1 வரை நடைபெறவுள்ளது. morgan stanley அறிக்கையின்படி தற்போது சாதகமான சூழல் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாகனம், வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறையும். GST வரிவிகித மாற்றம் காரணமாக பைக், கார்களின் விலை குறைய உள்ள நிலையில், இந்த தகவல் கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.