News February 16, 2025
கம்பீர், அகர்கர் வாக்குவாதம்?

சாம்பியன்ஸ் டிராபிக்கு விக்கெட் கீப்பரை தேர்வு செய்வது தொடர்பாக கம்பீர், அகர்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல், பண்ட் பெயர்கள் முதல் மற்றும் 2ஆவது விக்கெட் கீப்பர் இடத்துக்கு பரிசீலிக்கப்பட்டு உள்ளது. அப்போது ராகுலுக்கு கம்பீர், ரோஹித்தும், பண்டுக்கு அகர்கரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
Similar News
News March 4, 2026
BIG BREAKING: திமுகவுடன் காங்.. முடிவை அறிவித்தார்

திமுக – காங்., தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்டாலின், செல்வப்பெருந்தகை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கூட்டணிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்த நிலையில், தற்போது பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது.. ஒப்பந்தத்தின்படி, திமுக கூட்டணியில் காங்.,க்கு 28 MLA சீட் + 1 ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.
News March 4, 2026
குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பெற்றோர்களே உஷார்!

வீட்டில் இருக்கும்போது கூட குழந்தைகளுக்கு Diaper மாட்டும் பழக்கம் வந்துவிட்டது. அதில் அவர்கள் ஒருமுறை சிறுநீர் கழித்தால் கூட Diaper-ஐ மாற்ற வேண்டும். இல்லையென்றால் அதனால் ஏற்படும் நோய் தொற்றால், Urinary Infection-ல் தொடங்கி, சில சமயங்களில் சிறுநீரகம் வரை நோய் தொற்று பரவலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முடிந்தளவிற்கு டயப்பர் வேண்டாம் எனவும் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News March 4, 2026
ஈரான் தாக்கு பிடித்தால் அமெரிக்காவுக்கு பெரும் சிக்கல்

உச்ச தலைவர் கமேனியின் மரணத்திற்கு பிறகு ஈரான் சரணடையாமல் அதன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்தப் போர் 4 வாரங்களில் முடிவடையும் என்று டிரம்ப் கூறினாலும், அது நீளும் என அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர். ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் 10 நாள்களுக்குத் தொடர்ந்தால், அமெரிக்காவின் முக்கியமான ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் இருப்பு குறைந்து போகக்கூடும் என்று பென்டகன் எச்சரித்துள்ளது.


