News August 22, 2025

GALLERY: நம்ம ஊரு மெட்ராஸூ..!

image

வந்தாரை வாழ வைக்கும் சென்னை என்கிற மெட்ராஸ் மாநகருக்கு வயது 386. சென்னை என்றாலே பலருக்கும் ஞாபகம் வருவது மெரினா பீச்சும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும் தான். ஆனால், சென்னையில் இவற்றை போலவே பல Iconic இடங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை அடுத்தடுத்த படங்களில் கொடுத்துள்ளோம். உங்களுக்கு சென்னை என்றால் உடனே ஞாபகம் வருவது என்ன?

Similar News

News August 22, 2025

அனிருத் இசை நிகழ்ச்சிக்கு தடையில்லை: ஐகோர்ட்

image

நாளை சென்னை கூவத்தூரில் நடைபெறும், அனிருத்தின் இசை நிகழ்ச்சிக்கு <<17481538>>தடை கோரி<<>>, செய்யூர் MLA பனையூர் பாபு வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடையில்லை என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில், நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

News August 22, 2025

இனி பெண்களுக்கு மாதம் ₹5,000?… FACT CHECK

image

கிராம மகள் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் நாட்டில் உள்ள கிராமப்புற பெண்களுக்கு மாதம் ₹5,000 வழங்கப்பட உள்ளதாக செய்தி பரவி வருகிறது. இதுகுறித்து மத்திய தகவல் சரிபார்ப்பகம்(PIB Fack Check) விளக்கம் அளித்துள்ளது. அதில், ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனல் மூலம் பரப்பப்பட்ட இந்த தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 8799711259 வாட்ஸ்அப் எண், factcheck@pib.gov.in மெயில் மூலம் உண்மையை அறியலாம்.

News August 22, 2025

தீபாவளிக்கு பிரதீப்பின் டபுள் ட்ரீட்!

image

சென்செஷன் ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் LIK படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரின் ‘Dude’ படமும் தீபாவளிக்கு (அக்.20-ம் தேதி) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாள்கள் இடைவெளியில் 2 படங்கள் வெளிவருவது கலெக்‌ஷனை குறைக்கும் என சினிமா டிராக்கர்கள் தெரிவிக்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?

error: Content is protected !!