News September 27, 2025
GALLERY: கட்சி தொடங்கி சறுக்கிய ஹீரோஸ்!

கட்சி ஆரம்பித்த தமிழ் நடிகர்களை 2 பிரிவாக பிரிக்கலாம். ஜெயித்தவர்கள்/ ஓரளவு வென்றவர்கள் மற்றும் ஜொலிக்காதவர்கள்/ சறுக்கியவர்கள். முதல் பட்டியலில் இடம்பெறும் MGR ஆட்சியில் அமர்ந்தார், விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரானார். எதிர்பார்த்த வெற்றியை எட்டாத, 2-வது பட்டியலில் உள்ளவர்களை போட்டோக்களில் கொடுத்துள்ளோம். வலது பக்கம் Swipe செய்து பாருங்கள். விஜய் எந்த லிஸ்ட்டில் இணைவார் என நினைக்கிறீங்க?
Similar News
News January 5, 2026
விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு

யார் கூட்டணிக்கு வந்தால் என்ன? வரலன்னா என்ன? நம்ம அடுத்த வேலைய பார்ப்போம் என அடுத்த கட்ட கட்சி வேலைகளில் விஜய் கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. அதாவது, தொகுதி நிலவரம், மக்கள் செல்வாக்கு, சாதிய பின்னணி என அனைத்தையும் அலசி ஆராய்ந்து 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை அவர் தயார் செய்து வைத்திருக்கிறாராம். கட்சிக்கு அப்பாற்பட்ட பலரின் பெயர்களும் பட்டியலில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
News January 5, 2026
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய நேரம் நீட்டிப்பு!

ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட பயனர்கள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரத்தை இன்றிலிருந்து காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை IRCTC நீட்டித்துள்ளது. கடந்த ஆண்டு, முன்பதிவு செய்ய ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பை இந்திய ரயில்வே கட்டாயமாக்கியது. அதனையடுத்து காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய பயனர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
News January 5, 2026
கனிமொழியுடன் போனில் பேசிய அமித்ஷா

திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, கனிமொழியை போனில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். நல்ல உடல் நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன் என அமித்ஷா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் போனில் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டது TN அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது.


