News October 22, 2025
GALLERY: ரெஸ்ட்டில் இவ்ளோ வகைகளா?

ரெஸ்ட் எடுக்கணும் என்றால், சரி கொஞ்ச நேரம் தூங்கலாம் என்றுதானே யோசிப்போம். ஆனால், மனிதர்களுக்கு 6 வகையான ரெஸ்ட் தேவை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், நமது உடலையும், மூளையும் மீண்டும் ‘Reset’ பண்ண இது தேவை என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை பற்றி தெரிந்துகொள்ள, மேலே உள்ள போட்டோஸை Swipe பண்ணி பாருங்க. உங்களுக்கு இதில் எத்தனை விதமான ரெஸ்ட் தேவைப்படுது? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News March 24, 2026
கள்ளக்குறிச்சியில் தலை நசுங்கி பலி!

கச்சிராயப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜா (43). இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் கண்ணன் என்பவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். கச்சிராயப்பாளையம் புதிய பஸ் நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரி மோதியதில், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தனர். இதில், ராஜாவின் தலை மீது பின்பக்க டயர் ஏறி இறங்கியதால், அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 24, 2026
எந்தெந்த தொகுதியில் போட்டி.. நள்ளிரவிலும் BJP ஆலோசனை

சென்னை கமலாலயத்தில் நள்ளிரவு ஒரு மணி வரை எல்.முருகன், நயினார், தமிழிசை உள்ளிட்டோருடன் பியூஷ் கோயல் ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, கொங்கு மண்டலத்தில் அண்ணாமலை, வானதியும், தென் மாவட்டத்தில் நயினார், தமிழிசை உள்ளிட்டோர் போட்டியிடுவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.
News March 24, 2026
தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தொடர் சரிவில் உள்ள தங்கம், இன்று 1 அவுன்ஸ் $130.98(இந்திய மதிப்பில் 12,225) குறைந்துள்ளது. இதனால், 2.74% வீழ்ச்சியடைந்து $4,367-க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த பெரும் சரிவால், இந்திய சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, சென்னையில் 1 கிராம் ₹13,340-க்கும், 1 சவரன் ₹1,06,720-க்கும் விற்கப்பட்டு வருகிறது.


