News September 2, 2025

GMail பயனர்களுக்கு ஆபத்தா? உண்மையை உடைத்த கூகுள்

image

பல கோடி பேரின் G-Mail கணக்குகள் ஹேக் ஆகும் அபாயம் இருப்பதால், உடனடியாக பாஸ்வேர்டை மாற்றக் கூறி கூகுள் அறிவுறுத்தியதாக சமீபத்தில் தகவல் பரவியது. இந்நிலையில், தாங்கள் அப்படி எந்த எச்சரிக்கையும் கொடுக்கவில்லை என கூகுள் தெரிவித்துள்ளது. மேலும், GMail-ல் ஹேக்கர்ஸ் உள்நுழைய முற்படுவது வழக்கம் என்றாலும், அதனை தடுக்கும் பாதுகாப்பு வசதிகள் அனைத்தும் இருப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

Similar News

News September 3, 2025

விரைவில் நல்ல செய்தி: FM நிர்மலா சீதாராமன்

image

அமெரிக்காவின் 50% விரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என FM நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண டெல்லியில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறினார். மேலும் இந்த விஷயத்தில், ஏற்றுமதி செய்யும் அனைவருக்கும் மத்திய அரசிடமிருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று FM தெரிவித்தார்.

News September 3, 2025

ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில் உருவாகும் ‘கட்டா குஸ்தி 2’

image

‘கட்டா குஸ்தி 2’ பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனமும், விஷ்ணு விஷாலும் இணைந்து தயாரிக்கின்றனர். முந்தைய பாகத்தின் கதை முடிந்திருந்தாலும், 2-ம் பாகம் ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானரில், அனைவரின் இல்லங்களிலும் காணப்படும் முக்கிய பிரச்னைகளை நகைச்சுவை கலந்து உருவாக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு, இந்த பாகத்தையும் இயக்க உள்ளார்.

News September 3, 2025

TRS: புதிய கட்சி உதயமாகிறது

image

தெலங்கானாவில் 2 முறை ஆட்சியில் இருந்த BRS கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. உள்கட்சிப் பிரச்னையால் இன்று, அதன் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா <<17591580>>இடைநீக்கம்<<>> செய்யப்பட்டார். தனது வெளியேற்றத்துக்கு கட்சியின் மூத்த தலைவர்களே காரணம் என்று கூறும் கவிதா, நாளை தனிக்கட்சி தொடங்கவுள்ளதாகவும், அதற்கு BRS கட்சியின் முதல் பெயரான தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) என்பதையே வைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!