News July 11, 2024

சீறிப்பாயும் எலக்ட்ரிக் எப் 77 மேக் 2 பைக்

image

சாகச விரும்பிகளுக்காகவே அல்ட்ராவைலட் நிறுவனம் எப் 77 மேக் 2 என்ற எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்துள்ளது. 10.3 கிலோவாட்ஸ் ஹவர் திறன் கொண்ட பேட்டரி, 40.23 பி.எச்.பி., 100 என்.எம். டார்க் ஆற்றலை வெளிப்படுத்தும் இதற்கு பேட்டரி பேக்கப் விருப்பத்திற்கு ஏற்ப வழங்கப்படுகிறது. பைக்கை ஒருமுறை சார்ஜ் செய்தால் 323 கி.மீ., தூரம் வரை பயணிக்க முடியும். 9 விதமான வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை ₹2.9 லட்சமாகும்.

Similar News

News November 20, 2025

நடிகை சோனம் கபூர் மீண்டும் கர்ப்பம் (PHOTOS)

image

நடிகை சோனம் கபூர் தான் மீண்டும் கர்ப்பமடைந்ததை போட்டோ ஷூட் நடத்தி மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். பிங்க் நிற ஆடையில், கூலிங் கிளாஸுடன் கூலாக போஸ் கொடுத்த அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் அகுஜாவை 2018-ல் திருமண செய்த நடிகை சோனம் கபூருக்கு 2022-ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. சோனம் கபூரை நாமும் வாழ்த்தலாமே!

News November 20, 2025

படத்தின் பெயரை கட்சிக்கு வைத்தாரா மல்லை சத்யா?

image

தான் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு ’திராவிட வெற்றிக் கழகம்’ என பெயர் வைத்துள்ளார் மல்லை சத்யா. இந்த பெயரை எங்கோ கேட்டதுபோல இருக்கிறதே என சற்று ரீவைண்ட் செய்து பார்த்தபோது ஒன்று புலப்பட்டது. சமீபத்தில் பிக்பாஸ் அபிராமி ‘திராவிட வெற்றிக் கழகம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்திருந்தார். கொடியை டிகோட் செய்த நெட்டிசன்கள், ‘இதையா 15 நாள்களாக குழு அமைத்து முடிவு செய்தார்’ என கமெண்ட் அடிக்கின்றனர்.

News November 20, 2025

கொளுத்தி போட்ட சசி தரூர்.. காங்கிரஸில் சலசலப்பு

image

PM மோடியின் பொருளாதார, கலாச்சார சிந்தனைகளை காங்கிரஸ் MP சசிதரூர் சமீபத்தில் பாராட்டி இருந்தார். இது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தான் சார்ந்த கட்சியின் கொள்கைகளை விட, இன்னொரு கட்சியின் கொள்கைகள் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுகிறது என நினைத்தால், அவர் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என காங்கிரஸ் MP சந்தீப் தீக்‌ஷித் கேள்வியெழுப்பியுள்ளார்.

error: Content is protected !!