News February 10, 2025

SC/ST மக்களுக்கான நிதி நிறுத்தம்

image

பிரதான் மந்திரி ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டத்தின்கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது RTI மூலம் தெரிய வந்துள்ளது. சுமார் மூன்று ஆண்டு காலமாக ₹184 கோடி ரூபாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், SC/ST மக்களுக்கான மேம்பாட்டு பணிகள் முடங்கிப் போயிருக்கிறது. இரு தினங்களுக்கு முன் கல்வி நிதியை மத்திய அரசு வேறு மாநிலங்களுக்கு திருப்பி விட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News March 3, 2026

அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யாது ஏன்?

image

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ₹1,020 கோடி ஊழல் நடந்தது என்ற புகாரின் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை. இதை எதிர்த்து, அதிமுகவின் இன்பதுரை தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இன்றைய விசாரணைக்கு பின் வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News March 3, 2026

சற்றுமுன்: காய்கறிகள் விலை குறைந்தது

image

வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலை குறைந்துகொண்டே வருகிறது. மார்க்கெட் நிலவரப்படி, முருங்கைக்காய் ₹10 குறைந்து 1 கிலோ ₹50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கேரட், முள்ளங்கி, காலிஃபிளவர், மிளகாய் ஆகிய காய்கறிகளின் விலை கிலோவுக்கு ₹5 – ₹10 ரூபாய் வரை குறைந்து முறையே ₹20, ₹10, ₹12, ₹60 என விற்பனையாகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

News March 3, 2026

திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா? இன்று இறுதி முடிவு

image

ராஜ்யசபா பதவி எல்லாம் தேவையில்லை 2016 -ல் தங்களுக்கு கொடுத்த 41 இடங்களை இந்த தேர்தலிலும் கொடுங்கள் என்று காங்., பேச்சுவார்த்தை குழு, திமுகவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லையாம். இதனால், திமுக கூட்டணியில் காங்., தொடருமா அல்லது விலகுமா என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில்,கே.சி.வேணுகோபால், கிரிஷ் சோடங்கர் இன்று சென்னை வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!