News January 1, 2025
பயிர் காப்பீடு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு ₹69,515 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நெல், உளுந்து, நிலக்கடலை, வாழை, வெங்காயம், மரவள்ளி, மிளகாய், பாசிப்பயறு, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. விவசாயிகள் இத்திட்டத்தில் சேர முன்மொழிவு படிவம், அடங்கல், ஆதார், வங்கி எண் உள்ளிட்டவற்றை பொது சேவை மையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
Similar News
News September 11, 2025
பாமகவில் அடுத்தது என்ன நடக்கும்?

PMK-வில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கியுள்ள நிலையில், அடுத்தது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே ECI நடைமுறை படி தானே பாமக தலைவர் என கூறியுள்ளதால், இந்த நீக்கத்தை அவரது தரப்பினர் ஏற்க மறுப்பார்கள். மேலும் கட்சியின் சின்னம், பெயர் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அதனை உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது.
News September 11, 2025
T20 கேப்டன்ஷிப் ரெக்கார்டு: முதல் இடத்தில் SKY!

அதிக வெற்றி சதவிகிதம் கொண்ட இந்திய கேப்டனாக சூர்யகுமார் யாதவ்(82.6% வெற்றி) ரோஹித் சர்மாவை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரின் தலைமையில் இந்திய அணி 23 T20 போட்டிகளில் விளையாடி, 19 வெற்றி, 4 தோல்விகளை அடைந்துள்ளது. இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் ரோஹித் சர்மா(80.6%), விராட் கோலி(66.7%), ஹர்திக் பாண்டியா(62.5%) மற்றும் தோனி(60.6%) ஆகியோர் உள்ளனர்.
News September 11, 2025
அன்புமணி கூறுவது அனைத்தும் பொய்: ராமதாஸ்

அன்புமணியை நீக்குவது பாமகவுக்கு பின்னடைவு அல்ல என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயிரின் நடுவே முளைத்த களையான அன்புமணியை நீக்கிவிட்டதாக தெரிவித்தார். மேலும், அன்புமணி தன்னிடம் 40 முறை பேசியதாக கூறுவது உள்பட அவர் பேசுவது அனைத்தும் வடிகட்டிய பொய் என்றார். ஒட்டுக்கேட்பு கருவி வைத்து தன்னையே உளவு பார்த்தவர் அவர் என்றும் கடுமையாக குற்றஞ்சாட்டினார்.