News April 7, 2025
5ஆம் வகுப்பு வரை இன்று முழு ஆண்டு தேர்வு தொடக்கம்

கோடை வெயில் காரணமாக, 1 – 5 ஆம் வகுப்புகளுக்கு இறுதி பருவத் தேர்வு இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, 1,2,3ஆம் வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 4,5ஆம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4 மணி வரையும் தமிழ் உட்பட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறவுள்ளன. 1-3ஆம் வகுப்புக்கு ஏப்.12ஆம் தேதியும், 4-5ஆம் வகுப்பு ஏப்.18ஆம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
Similar News
News December 22, 2025
ராணிப்பேட்டை: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

ராணிப்பேட்டை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <
News December 22, 2025
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

20 நாள்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையின் மேல் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையின் மேல் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனாலும், தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மலைக்கு செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News December 22, 2025
2026 தேர்தலில் இருந்து விலகுகிறேன்: நடிகர் அறிவிப்பு

2026 தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சரத்குமார் அறிவித்துள்ளார். தனது கட்சியை (சமக) கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்த சரத், விருதுநகரை குறிவைத்து காய் நகர்த்தியதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனக்கு வாய்ப்பு கொடுத்தாலும், தேர்தலில் நிற்க மாட்டேன்; தனது வாய்ப்பை பிறருக்கு விட்டுக் கொடுப்பேன் என சரத் கூறியுள்ளார். அதேநேரம், அவரது மனைவி ராதிகா தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


