News May 2, 2024
தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை

சமூக ஊடகங்களில் தேர்தல் கண்ணோட்டத்துடன் போலி வீடியோ பரப்பப்படுவதை தடுக்கக்கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். இந்த விவகாரத்தை பொறுத்தவரையில் தேர்தல் ஆணையமே இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News January 29, 2026
2026 தேர்தலில் நான் போட்டியிடவில்லை: சரத்குமார்

2026 தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இல்லை என்று சரத்குமார் அறிவித்துள்ளார். தான் போட்டியிடாதபோது தனது மனைவி ராதிகாவும் போட்டியிடமாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தன்னுடன் பயணிக்கும் கடின உழைப்பாளிகளுக்கு 5 இடங்களையாவது பெற்றுத் தருவேன் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, 2024 மக்களவை தேர்தலில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
News January 29, 2026
தேமுதிகவின் கூட்டணி உறுதியானதா?

தேமுதிகவின் கூட்டணி கணக்கு ஒருவழியாக சால்வ் ஆனதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக, தேமுதிக கேட்டதாக சொல்லப்படும் 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட்டை அதிமுக கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திமுக பக்கம் ரகசிய பேச்சுவார்த்தையை அக்கட்சி தொடங்க, 6 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் என்ற முடிவுடன் கூட்டணி உறுதியாகி இருக்கிறதாம். இதுபற்றி பிரேமலதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 29, 2026
தேசிய செய்தித்தாள் தினம் இன்று!

இன்று தேசிய செய்தித்தாள் தினம். 1780-ம் ஆண்டு இதே நாளில், நாட்டில் முதல்முறையாக ‘ஹிக்கிஸ் பெங்கால் கெசட்’ செய்தித்தாள் அச்சிடப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் செய்தித்தாள்கள் ஆற்றிய பங்கை நினைவு கூறும் விதமாக, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்று செய்தித்தாளாக இருந்தவை இன்று, Short News App-களாக மாறியுள்ளன. காலங்கள் ஓட, வடிவங்கள் மட்டுமே மாறியுள்ளன, வீரியம் எப்போதும் ஒன்றே!


